ஆப்நகரம்

எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் சரோஜா–2!

வெங்கட் பிரபு இயக்கிய சரோஜா திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் எஸ்.ஜே.சூர்யா முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.

TOI Contributor 3 Aug 2016, 4:25 am
வெங்கட் பிரபு இயக்கிய சரோஜா திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் எஸ்.ஜே.சூர்யா முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.
Samayam Tamil sj surya going to act in saroja 2
எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் சரோஜா–2!


சரோஜா திரைப்படம் மக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பையும், நல்ல விமர்சனங்களையும் பெற்றது. தற்போது சரோஜா திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். வெங்கட் பிரபுவின் உதவியாளர் காந்தபிரியன் திரைப்படத்தை இயக்குகிறார். கதை, திரைக்கதை பகுதிகளை சமரன் எழுதுகிறார். படத்தில் எஸ்.ஜே.சூர்யா முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரேம்ஜி அமரன் மற்றும் விடிவி கணேஷூம் நடிக்கின்றனர். பிரவீன் கேஎல் படத்தொகுப்பு செய்ய, இசை அமைக்கிறார் யுவன் ஷங்கர் ராஜா.

அடுத்த செய்தி

Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்
டிரெண்டிங்