ஆப்நகரம்

அஜித் - ஜோதிகாவுக்காக எழுதப்பட்ட கதை தான் ‘நியூ’ படம்!

எஸ்.ஜே.சூர்யா, அஜித் - ஜோதிகாவை மனதில் வைத்து எழுதப்பட்ட ‘நியூ’ படத்தின் கதையில் அவரே ஹீரோவாக நடித்துவிட்டார்.

Samayam Tamil 8 May 2019, 5:58 pm
‘வாலி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் சூர்யா. இந்தப் படம் இவருக்கு மிகப்பெரிய அந்தஸ்தை கொடுத்ததுஉ அடுத்தது அவர் இயக்கத்தில் வெளியான படம ‘குஷி’.
Samayam Tamil new-sj


இந்தப்படத்தில் விஜய் ஹீரோவாகவும், ஜோதிகா ஹீரோயினியாகவும் நடித்திருந்தனர். இந்தப் படமும் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. தற்போது எஸ்.ஜே.சூர்யா, பல படங்களில் ஹீரோவாகவும், வில்லனாகவும் நடித்து வருகிறார்.

மேலும் இவர் மீண்டும் ‘குஷி’ படத்தை அடுத்து அஜித், ஜோதிகாவை மனதில் வைத்து ‘நியூ’ படத்தின் கதையை எழுதியுள்ளார். அந்தப் படத்தை இயக்க எஸ்.ஜே. சூர்யா தயாரானார். அதற்காக அவர்களை வைத்து அந்தப் படத்தின் போட்டோஷூட்டும் நடத்தியுள்ளார் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா. அதற்காக போட்டோஷூட்டும் நடத்தப்பட்டுள்ளது.

ஆனால் அஜித் அப்போது ‘அமர்க்களம்’, ‘ஜனா’ ஆகிய படங்களில் பிஸியாக இருந்ததால் இந்த படத்தில் நடிக்க முடியவில்லை. இதனால் எஸ்.ஜே சூர்யாவே இந்தப் படத்தை இயக்கி அதில் ஹீரோவாக நடித்தார். அவருக்கு ஜோடியாக நடிகை சிம்ரன் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்