ஆப்நகரம்

23 கோடி வரை வசூலித்த ‘யு டர்ன்’!

சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘யு டர்ன்’ படம் இதுவரை ரூ.23 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

Samayam Tamil 27 Sep 2018, 5:11 pm
நடிகை சமந்தா நடிப்பில் இம்மாதம் 13ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் வெளியான படம் ‘யு டர்ன்’. இந்தப் படம் வெளியான அன்று சமந்தாவின் இன்னொரு படமான ‘சீமராஜா’ படமும் வெளியானது.
Samayam Tamil u turrnn


இந்தப் படத்தில் சமந்தாவுடன் நடிகர் ஆதி, ராகுல் ரவீந்திரன், பூமிகா உட்பட பலர் நடித்துள்ளனர். ‘யு டர்ன்’ படத்திற்கு ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்தப் படம் கன்னடத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படத்தின் ரீமேக்காகும். தமிழ் மற்றும் தெலுங்கில் இந்தப் படத்தை பவன்குமார் இயக்கியுள்ளார். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்தள்ளார்.

இந்நிலையில் இப்படம் உலகம் முழுவதும் வெளியாகி 23 கோடி ரூபாய் வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதனை சமந்தா தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்