ஆப்நகரம்

இப்படி பண்ணாதீங்க.. கெட்ட வார்த்தைல திட்டுறாங்க: கடுப்பான சினேகனின் மனைவி.!

பாடலாசிரியர் சினேகனின் மனைவி கன்னிகா ரவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Samayam Tamil 20 May 2022, 10:21 am
Samayam Tamil Snekan - Kannika
Snekan - Kannika

பிரபல கவிஞர் சினேகனுக்கும் நடிகை கன்னிகா ரவிக்கும் கடந்த ஆண்டு ஜுலை மாதம் சென்னையில் உள்ள கிரீன் பார்க் ஹோட்டலில் உலகநாயகன் கமல்ஹாசன் தலைமையில் திருமணம் நடந்தது. அர்ச்சகர் இல்லாமல் நடைப்பெற்ற இந்தத் திருமணத்தில் கமல் தாலி எடுத்துக் கொடுக்க, அதை கன்னிகாவின் கழுத்தில் கட்டினார் சினேகன்.

தமிழ் சினிமாவில் 700க்கும் மேற்பட்ட படங்களில் பாடலாசிரியராக பணிபுரிந்துள்ளவர் கவிஞர் சினேகன். இவர் தனியார் தொலைக்காட்சி நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் ஒன்றில் போட்டியாளராக கலந்துகொண்டதன் பிரபலமானார். தற்போது நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்து தீவிர அரசியலில் ஈடுபட்டுவரும் சினேகன், கடந்த ஆண்டு தொலைக்காட்சி நடிகை கன்னிகாவை கரம்பிடித்தார்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

சினேகன், கன்னிகா இருவரும் கடந்த எட்டு ஆண்டுகளாக காதலித்துவந்துள்ளன. இந்நிலையில், இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த ஆண்டு இவர்களின் திருமணம் நடந்தது. சென்னையில் உள்ள கிரீன் பார்க் ஹோட்டலில் நடந்த இவர்களின் திருமணத்தை நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தலைமையேற்று நடத்திவைத்தார்.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் கன்னிகா ரவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் கன்னிகா தான் வரைந்த ஓவியத்தை தனது கணவரிடம் காட்டி எப்படி இருக்கிறது என்று கேட்கிறார். அதற்கு சினேகன் உன்னை போலவே அழகாக இருக்கிறது என்று கூறி முத்தம் கொடுக்கிறார்.

படுக்கையறை காட்சிக்கு எத்தனை டேக்..?: ரசிகரின் கேள்விக்கு மாளவிகாவின் பதிலடி.!
முத்தம் கொடுக்காதீர்கள். இந்த மாதிரி வீடியோவை போடமாட்டேன். இப்படி போஸ்ட் போட்டா ரொம்ப கெட்ட வார்த்தையா பேசுறாங்க என சிரித்து கொண்டே கன்னிகா சொல்ல சினேகனும் சிரிக்கிறார். சமூக வலைத்தளங்களில் வைரலாகும் இந்த வீடியோவிற்கு ரசிகர்கள் பலரும், உங்களுக்கு பிடிச்ச மாதிரி இருங்க. மத்தவங்க கமெண்ட்ஸ் பத்தியெல்லாம் கவலை படாதீங்க என கமெண்ட் அடித்து வருகின்றனர்

அடுத்த செய்தி

டிரெண்டிங்