ஆப்நகரம்

விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் இணையும் ‘சோலோ’ பட ஒளிப்பதிவாளர்!

ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் இணையும் புதிய படத்தின் ஒளிப்பதிவாளராக ‘சோலோ’ படத்தின் ஒளிப்பதிவாளர் கிரிஸ் கங்காதரன் இணையவுள்ளார்.

TNN 26 Oct 2017, 3:47 pm
ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் இணையும் புதிய படத்தின் ஒளிப்பதிவாளராக ‘சோலோ’ படத்தின் ஒளிப்பதிவாளர் கிரிஸ் கங்காதரன் இணையவுள்ளார்.
Samayam Tamil solo movie cinematographer will join with vijay ar murugadoss movie
விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் இணையும் ‘சோலோ’ பட ஒளிப்பதிவாளர்!


நடிகர் விஜய் - இயக்குனர் ஏ.ஆர்.முருதாஸ் இணையும் புதிய படத்திற்கு கிரிஸ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். இவர் ‘சோலோ’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்து வருபவர்.

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான ‘மெர்சல்’, பல்வேறு தடைகளை தாண்டி பல சாதனைகளை படைத்து வருகிறது. ‘துப்பாக்கி’, ‘கத்தி’ என்ற வெற்றி படங்களை தொடர்ந்து 3-வது முறையாக ஏ.ஆர்.முருகதாஸுடன் விஜய் கூட்டணி அமைக்கிறார். இந்த கூட்டணி ரசிகர்களிடையே அதிக சந்தோஷத்தை தந்துள்ளது.

தற்போது ‘மெர்சல்’ நல்ல வரவேற்பு பெற்றுள்ளதால் விஜய் தன் அடுத்தப்படத்தின் வேலைகளில் இறங்கியுள்ளார். முருகதாஸும் அதற்காக திரைக்கதை அமைக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் இவர்கள் இந்தப் புதிய படத்திற்கு ‘சோலோ’ படத்தில் பணியாற்றி வரும் கிரிஸ் கங்காதரன் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்