அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் புதிய படத்தின் இசையை பிரபல சோனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
சின்னத்திரையில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக தனது பணியை தொடங்கிய சிவகார்த்திகேயன் படிப்படியாக முன்னேறி தற்போது பல கோடி சம்பளம் வாங்கும் முன்னணி நடிகராக வளர்ந்து விட்டார். தற்போது இவரை வைத்து படமெடுக்க பல இயக்குனர்கள் போட்டி போட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சிவகார்த்திகேயன், தன்னுடைய நண்பரும், பாடலாசிரியரும், பாடகரும், நடிகருமான அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தை சிவகார்த்திகேயன் தயாரிக்கவுள்ளார். இந்தப் படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக், இன்று வெளியாகிறது.
இந்நிலையில், இந்தப் படத்தின் இசை உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்தப் படத்துக்கு திபு நினன் தாமஸ் என்பவர் இசையமைத்துள்ளார். இவர் ஏற்கெனவே ‘மரகத நாணயம்’ படத்துக்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.