ஆப்நகரம்

Suriya சூரர் ஏன் மாஸ்டருடன் தைரியமா வர்றார்னு அப்போ புரியல, இப்போ புரியுது

சூரரைப் போற்று படம் ஏன் விஜய்யின் மாஸ்டருடன் வருகிறது என்று தற்போது பலருக்கும் புரிந்துள்ளது.

Samayam Tamil 8 Jan 2020, 4:35 pm
சூரரைப் போற்று படம் ஏன் விஜய்யின் மாஸ்டருடன் வருகிறது என்று தற்போது பலருக்கும் புரிந்துள்ளது.
Samayam Tamil soorarai pottru can definitely come with master movie
Suriya சூரர் ஏன் மாஸ்டருடன் தைரியமா வர்றார்னு அப்போ புரியல, இப்போ புரியுது


சூரரைப் போற்று டீஸர்

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா வித்தியாசமாக நடித்துள்ள சூரரைப் போற்று படம் தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக வரும் ஏப்ரல் மாதம் 9ம் தேதி ரிலீஸாக உள்ளது என்று கூறப்படுகிறது. அதே நாளில் தான் விஜய்யின் மாஸ்டரும் வெளியாகப் போகிறது. இந்நிலையில் சூரரைப் போற்று படத்தின் டீஸரை வெளியிட்டனர். டீஸரை பார்த்த பிறகு அனைத்தும் புரிந்துவிட்டது.

வெற்றி தான்

கைதி படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் நிச்சயம் மாஸ்டர் படத்தை வித்தியாசமாக கொடுப்பார் என்று நம்பப்படுகிறது. இந்நிலையில் விஜய் படத்துடன் ஏன் சூர்யா படத்தை வெளியிடணும் என்று கேட்டவர்களுக்கு பதில் கிடைத்துள்ளது. டீஸரை பார்த்ததுமே சூரரைப் போற்று படம் எந்த பெரிய நடிகரின் படத்துடன் வந்தாலும் நிச்சயம் வெற்றி பெறும் என்பது சினிமா ரசிகர்களுக்கு நன்றாகவே புரிந்துவிட்டது.

சிறப்பு

சுதா கொங்கராவின் டைரக்ஷன் ஸ்டைலே தனி. அவர் ஹீரோவை கத்தி கதறவிட்டு, பன்ச் வசனம் பேச வைத்து, 100 பேரை தூக்கிப் போட்ட மிதிக்கச் செய்து மாஸ் காட்ட மாட்டார். அதனாலேயே சூரரைப் போற்று படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது. டீஸர் வெறும் சாம்பிள் தான் மெயின் பிக்சரில் இருக்கு வேடிக்கை என்று சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மாஸ்டர், சூரர்

சுதா கொங்கராவின் இறுதிச் சுற்று படத்தை பார்த்தவர்களுக்கு சூரரைப் போற்று நிச்சயம் ஹிட்டாகும் என்ற நம்பிக்கை வந்துவிட்டது. மாஸ்டருக்கு சூரர் நிச்சயம் செம டஃப் கொடுப்பார் என்பதில் சந்தேகமே இல்லை. முன்னதாக தீபாவளிக்கு விஜய்யின் பிகிலுடன் வந்த கைதி படத்தின் கதை பிடித்திருந்ததால் அதை ரசிகர்கள் சூப்பர் ஹிட்டாக்கினார்கள். அதனால் சூரரையும் சினிமா ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என்பதில் சந்தேகமே இல்லை.

அடுத்த செய்தி

டிரெண்டிங்