ஆப்நகரம்

அதிகம் கூகுள் செய்யப்பட்ட திரைப்படங்களில் 'சூரரைப் போற்று' சாதனை

சூர்யாவின் 'சூரரைப் போற்று' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், பல்வேறு சாதனைகளையும் படைத்துள்ளது

Samayam Tamil 9 Dec 2020, 7:05 pm
2020ஆம் ஆண்டில் அதிகம் கூகுள் செய்யப்பட்ட திரைப்படங்களின் பட்டியலில் சூர்யாவின் 'சூரரைப் போற்று' திரைப்படம் சாதனைப் படைத்திருக்கிறது.
Samayam Tamil சூர்யா
சூர்யா


சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, ஊர்வசி, பரேஷ் ராவல், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் 'சூரரைப் போற்று' திரைப்படம் ஓ.டி.டி-இல் வெளியாகி தொடர்ந்து பல்வேறு சாதனைகளைப் படைத்து வருகிறது.

இந்நிலையில், 'சூரரைப் போற்று' திரைப்படம் மற்றொரு சாதனையையும் இந்தாண்டு படைத்துவிட்டது. 2020ஆம் ஆண்டில் அதிகம் கூகுள் செய்யப்பட்ட படங்களில் 'சூரரைப் போற்று' இடம்பெற்றிருக்கிறது.

சில்க் ஸ்மிதாவாக நடிக்கும் பிரபல விஜே: நீங்க என்ன நினைக்கிறீங்க?


கூகுளில் அதிகம் தேடிய படங்களின் வரிசையில் இந்திய அளவில் இரண்டாம் இடத்திலும், சிங்கப்பூரில் எட்டாவது இடத்திலும், ஐக்கிய அரபு அமீரகத்தில் இரண்டாம் இடத்திலும் 'சூரரைப் போற்று' உள்ளது. இதனை சமூக வலைதளங்களில் சூர்யா ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்