ஆப்நகரம்

Suriya பறக்கும் விமானத்தில் வெளியாகும் சூரரைப் போற்று பாடல்!

பறக்கும் விமானத்திலிருந்து சூரரைப் போற்று படத்தின் பாடல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 11 Feb 2020, 2:59 pm
நடிகர் சூர்யா நடிக்கும், சூரரைப் போற்று படத்தின் வெய்யோன் சில்லி பாடலை பறக்கும் விமானத்திலிருந்து வெளியிடவுள்ளதாம் படக்குழு. பாடல் நாளை மறுநாள் வெளியிடப்படவுள்ளது.
Samayam Tamil veyyon silli


சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்திருக்கும், சூரரைப் போற்று படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு படக்குழு பிரம்மாண்டமான திட்டத்துடன் இருப்பதாக தகவல் வெளியானது. இந்த படத்தின் பாடல் வெளியீடு சென்னை விமான நிலையத்தில் நடைபெறும் எனவும் செய்திகள் வந்தன.

இந்நிலையில், இந்த படத்தின் இரண்டாவது சிங்கிளான வெய்யோன் சில்லி பாடல், பறக்கும் விமானத்திலிருந்து வெளியிடப்படவுள்ளது என படக்குழு அறிவித்துள்ளது.


இதுகுறித்து 2டி எண்டெர்டெய்ன்மெண்ட் ட்விட்டர் பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது,

நாங்கள் வெய்யோன் சிலி பாடலை வெளியிடுகிறோம். இந்த முறை பறக்கும் விமானத்தில் வெளியாகிறது. ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் போயிங் 737 விமானத்தில் வெளியாகிறது பாடல் என்று குறிப்பிட்டுள்ளது.

சூர்யாவின், 2டி எண்டெர்டெய்ன்மென்ட் தயாரிப்பு நிறுவனத்தின் ட்விட்டர் கணக்கில் இதுகுறித்த தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் சில நிமிடங்களில் சூரரைப் போற்று படத்தின் இன்னொரு அப்டேட் வெளியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்