ஆப்நகரம்

சுமாரானவர் சொன்னால் அழகானவர் வில்லனா?: சூரி விஷயத்தில் ஜுவாலா குமுறல்

விஷ்ணு விஷால் தந்தை மீது சூரி புகார் அளித்துள்ள விவகாரம் தொடர்பாக பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா கருத்து தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 11 Oct 2020, 11:12 am
வீர தீர சூரன் படத்தின் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜனும், விஷ்ணு விஷாலின் தந்தை ரமேஷ் குட்வாலாவும் நிலம் வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 2.70 கோடி மோசடி செய்துவிட்டதாக சூரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
Samayam Tamil jwala gutta


Soori சூரி கொடுத்த ரூ. 2.70 கோடி மோசடி புகார்: விஷ்ணு விஷால் விளக்கம்

அந்த புகார் குறித்து அறிந்த விஷ்ணு விஷால் தாங்கள் யாரையும் ஏமாற்றவில்லை என்று சமூக வலைதளத்தில் விளக்கம் அளித்துள்ளார். இந்நிலையில் விஷ்ணு விஷாலின் வருங்கால மனைவியும், பேட்மிண்டன் வீராங்கனையுமான ஜுவாலா கட்டா சூரியின் விவகாரம் குறித்து ட்வீட் செய்துள்ளார்.

அந்த ட்வீட்டில் ஜுவாலா கட்டா கூறியிருப்பதாவது,
இந்த சமூகம் ஒருவரை பற்றி தெரியாமலேயே ஒரு முடிவுக்கு வந்துவிடுகிறது. இது நியாயம் அல்ல. பார்க்க பணக்காரர் போன்று தெரிபவர் அல்லது நல்ல குடும்பப் பின்னணி இருப்பவருடன் ஒப்பிடும்போது
ஒருவர் பார்க்க பணக்காரர் போன்று இல்லாமல் இருப்பதால் அவர் பாதிக்கப்பட்டவர் என்று சொல்லிவிடுவதா?.

அவர் கஷ்டங்களை சந்தித்தவர், கஷ்டங்கள் பற்றி எப்பொழுது பார்த்தாலும் போசுவதால் அவருக்கு ஆதரவாக இந்த சமூகம் பேசுகிறது. தன் பிரச்சனையை பற்றி பேசுபவரை விட குறைவான பிரச்சனைகள் உள்ளவர் அல்லது பிரச்சனைகள் குறித்து பேசாதவர் பற்றி என்ன சொல்வது? அவர்கள் மனிதர்கள் இல்லையா? அவர்களுக்கு எந்த அடிப்படை உரிமைகள் இல்லையா?

ஒருவர் பார்க்க குறிப்பிட்ட வகையில் இருப்பதை வைத்து எப்படி அவரை நம்புவது? சிவப்பான குழந்தைகள் பெற சிவப்பான மருமகள் வேண்டும் என்று விரும்பும் சமூகம் பார்க்க நன்றாக இருப்பவர் வில்லன் என்று முதல் பார்வையிலேயே எப்படி சொல்கிறது... ஏனென்றால் பார்க்க ஓகேவாக இருப்பவர் சொல்வதாலா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

பண விவகாரத்தில் எதற்காக பார்க்க சுமாராக இருக்கிறார், நன்றாக இருக்கிறார் என்று உருவத்தை பற்றி பேசுகிறீர்கள் ஜுவாலா என சமூக வலைதளவாசிகள் தெரிவித்துள்ளனர். நீங்கள் இப்படி பேசினால், விஷ்ணு விஷால் பக்கம் நியாயம் இருந்தால் கூட மக்கள் சூரி பக்கம் தான் சாய்வார்கள் என்று மேலும் கூறியுள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்