ஆப்நகரம்

தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் சூரியின் மகன் சர்வான்!

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர் சூரியின் மகன் சர்வான் அறிமுகமாகியுள்ளார்.

Samayam Tamil 4 Jan 2018, 5:03 pm
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர் சூரியின் மகன் சர்வான் அறிமுகமாகியுள்ளார்.
Samayam Tamil sooris son sarvan makes his acting debut in suseenthrians angelina movie
தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் சூரியின் மகன் சர்வான்!


தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சூரி. நாகேஷ், கவுண்டமனி, செந்தில், விவேக், சந்தானம் ஆகியோரது வரிசையில் தற்போது சூரியும் வந்துவிட்டார். இந்த நிலையில் முன்னணி மாஸ் ஹீரோக்கள், ஹீரோயின்கள் தங்களது, மகன் அல்லது மகளை சினிமாவில் நடிக்க வைத்து வருகின்றனர். அந்த வகையில், விஜய், மீனா, ஜெயம் ரவி தம்பி ராமையா, விஜயகாந்த் சியான் விக்ரம் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். இவர்களின் வரிசையில், தற்போது காமெடி நடிகர் சூரியும் இடம் பிடித்துள்ளார்.

#Angelina pic.twitter.com/x569QYaK3d — Suseenthiran (@dir_susee) January 4, 2018 ஏஞ்சலினா என்ற படத்தின் மூலம் சூரியின் மகன் சர்வான் அறிமுகமாகியுள்ளார். இயக்குனர் சுசீந்திரன் குழந்தைகளை வைத்து படம் இயக்குவதில், அதிக ஆர்வம் கொண்டவர். பல படங்களை குழந்தைகளை வைத்து இயக்கியுள்ளார். தற்போது ஏஞ்சலினா என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில், சுசீந்திரன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஏஞ்சலினா படம் மூலம் சூரியின் மகன் சர்வான் சினிமாவில் அறிமுகமாகிறான் என்று பதிவு செய்துள்ளார். இப்படத்தில் சுசீந்திரனும் ஒரு முக்கிய ரோலில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்கிறார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்