ஆப்நகரம்

சௌந்தர்யா ரஜினிகாந்த், தனுஷ் இணையும் 'வேலையில்லா பட்டதாரி 2'

சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் புதுப்படத்துக்கான அறிவிப்பு இன்று காலை வெளியானது.

TNN 9 Nov 2016, 11:02 am
சென்னை: சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் புதுப்படத்துக்கான அறிவிப்பு இன்று காலை வெளியானது.
Samayam Tamil soundarya rajinikanth and dhanush joins for vip 2
சௌந்தர்யா ரஜினிகாந்த், தனுஷ் இணையும் 'வேலையில்லா பட்டதாரி 2'


கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பெரிய அறிவிப்பு ஒன்று வெளியாகும் என நடிகர் தனுஷ் தெரிவித்திருந்த நிலையில், தனுஷ் மற்றும் சௌந்தர்யா ரஜினிகாந்த் கூட்டணியில் 'வேலையில்லா பட்டதாரி 2' திரைப்படம் உருவாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தனுஷ் நடிக்கும் 33வது திரைப்படமாகும்.
Proud to be directing @dhanushkraja in this Cult Franchise for @theVcreations & @WunderbarFilms_ #D33 #BiLingual #Tamil&Telugu pic.twitter.com/XPiceaebYW — soundarya rajnikanth (@soundaryaarajni) November 9, 2016 கடந்த 2014ஆம் ஆண்டு இயக்குனர் வேல்ராஜ் இயக்கத்தில் வெளியான 'வேலையில்லா பட்டதாரி' படத்தின் இரண்டாம் பாகத்தை சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கவிருக்கிறார். இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணுவின் 'வி கிரியேஷன்ஸ்' மற்றும் தனுஷின் 'வுண்டர்பார் ஃபிலிம்ஸ்' நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகவிருக்கும் இப்படத்தின் வசனம் மற்றும் கதையை தனுஷ் எழுதியுள்ளார்.

'வேலையில்லா பட்டதாரி 2' அறிவிப்பு வெளியானதில் இருந்து 'ரகுவரன்இஸ்பேக்' எனும் ஹெஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது. அடுத்த மாதம் முதல் இப்படத்தின் பணிகள் துவங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. விரைவில் இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்