ஆப்நகரம்

Soundarya Rajinikanth: பிரபல நடிகைரை மறுமணம் செய்கிறார் செளந்தர்யா ரஜினிகாந்த்

சென்னை: ரஜினிகாந்தின் 2வது மகள் செளந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் வரும் ஜனவரி மாதம் நடைப்பெறும் என்றும் பிரபல நடிகரை திருமணம் செய்ய உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

Samayam Tamil 14 Nov 2018, 11:23 am
சென்னை: ரஜினிகாந்தின் 2வது மகள் செளந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் வரும் ஜனவரி மாதம் நடைப்பெறும் என்றும் பிரபல நடிகரை திருமணம் செய்ய உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.
Samayam Tamil Soundarya-Rajinikanth


சூப்பர் ஸ்டார் ரஜினியின் 2வது மகளும், கோச்சடையான், விஐபி 2 படத்தின் இயக்குனருமான செளந்தர்யா ரஜினிகாந்த் கடந்த 2010ம் ஆண்டு அஸ்வின் என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு ‘தேவ்’ என்ற மகன் உள்ளார்.

மறுமணம் :
இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 2017ல் விவாகரத்து பெற்று பிரிந்தனர். தற்போது பெற்றோருடன் சேர்ந்து வாழும் செளந்தர்யாவுக்கு மறுமணம் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.


செளந்தர்யாவுக்கு 'வஞ்சகர் உலகம்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தவரும், ஒரு மருந்து நிறுவனத்தை நடத்தி வருபவருமான விசாகன் என்பவர் மாப்பிள்ளை என கூறப்பட்டுள்ளது.

யார் இந்த விசாகன் - முழு விபரம் இதோ!

இரு வீட்டாரின் சம்மதத்துடன் இந்த திருமணம் நிச்சயிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் நடைப்பெற்று வருகின்றன. வரும் ஜனவரி மாதம் இவர்களின் திருமணம் நடைப்பெற உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அடுத்த செய்தி

டிரெண்டிங்