ஆப்நகரம்

ரஜினி மகளுக்கு பெரிய மனசு: இல்லனா இப்படி ட்வீட் செஞ்சிருப்பாங்களா?

சவுந்தர்யா ரஜினிகாந்த் தனது மாமியாருக்கு அன்னையர் தின வாழ்த்து தெரிவித்ததை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Samayam Tamil 10 May 2020, 5:16 pm
உலக அன்னையர் தினத்தை முன்னிட்டு பலரும் தங்கள் அம்மாக்களுக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அம்மாவுடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு தங்களின் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டுள்ளனர். சிறு வயதில் எடுத்த புகைப்படம் முதல் லேட்டஸ்ட் புகைப்படம் வரை ஷேர் செய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil soundarya rajinikanth


இந்நிலையில் ரஜினியின் இளை மகள் சவுந்தர்யாவும் அன்னையர் தின வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். தன் அம்மா லதா ரஜினிகாந்துக்கு மட்டும் அல்ல மாமியாருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு தாய் என்கிற பட்டத்தை அளித்த மகன் வேதுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

சவுந்தர்யா தான் சிறுமியாக இருந்தபோது தாயுடன் சேர்ந்து எடுத்த புகைப்படம், மாமியாரின் கன்னத்துடன் கன்னம் வைத்து எடுத்த புகைப்படம், மகனுடன் சேர்ந்து எடுத்த புகைப்படம் ஆகியவற்றை வெளியிட்டுள்ளார்.
இதை பார்த்த ரசிகர்களோ, மாமியாரை தாயாக பார்க்கும் சவுந்தர்யாவை வாழ்த்தியுள்ளனர். மேலும் சவுந்தர்யாவின் முகத்தை பார்க்கும் போது அவர் சந்தோஷமாக இருப்பது தெரிகிறது. தலைவரின் மகள் இன்று போல் என்றும் சந்தோஷமாக வாழ வேண்டும் என்று மனதார வாழ்த்தியுள்ளனர்.

முன்னதாக கடந்த 6ம் தேதி வேதின் 5வது பிறந்தநாளை கணவருடன் சேர்ந்து கொண்டாடியபோது எடுத்த புகைப்படத்தை சவுந்தர்யா வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mothers day அன்னையர் தின ஸ்பெஷல்: கோலிவுட் கொண்டாடும் சூப்பர் அம்மாக்கள்

அடுத்த செய்தி

டிரெண்டிங்