ஆப்நகரம்

விசுவாசத்துக்கு விதிவிலக்கு எதுக்கு? : எகிறிய அஜித்!

ஒட்டுமொத்த திரையுலகமும் ஸ்ட்ரைக்கில் இருக்கும்போது விசுவாசம் படத்துக்கு மட்டும் ஏன் விதிவிலக்கு என பட தயாரிப்பாளரையே கடிந்துள்ளார் அஜித்.

Samayam Tamil 15 Mar 2018, 6:51 am
சென்னை: ஒட்டுமொத்த திரையுலகமும் ஸ்ட்ரைக்கில் இருக்கும்போது விசுவாசம் படத்துக்கு மட்டும் ஏன் விதிவிலக்கு என பட தயாரிப்பாளரையே கடிந்துள்ளார் அஜித்.
Samayam Tamil sources say that ajith has strictly told sathyajyothi thiagarajan to stop viswasam shoot
விசுவாசத்துக்கு விதிவிலக்கு எதுக்கு? : எகிறிய அஜித்!


தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாக குழு அறிவித்த மார்ச் 1 முதல் புதிய படங்கள் வெளியீடு இல்லை. மார்ச் 16 முதல் அனைத்து திரைப்பட துறை சார்ந்த படப்பிடிப்பு, போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் அனைத்தையும் நிறுத்தப்படுகிறது.

இந்நிலையில் அஜித் நடிக்கவுள்ள விசுவாசம் படத்திற்கான அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. சூட்டிங் துவங்க வில்லை என்றால், கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்படும் என தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் முறையிட்டதுடன் படப்பிடிப்பு நடத்தவும் சிறப்பு அனுமதி கேட்டார்.

இதுகுறித்து கேள்விப்பட்ட அஜித், "எல்லாருடைய நலனுக்கான போராட்டத்தில் நமது நலன் மட்டும் பார்ப்பது நியாயம் அல்ல. சங்கத்தின் முன்னாள் தலைவரான நீங்கள் முடிவை அமல் படுத்த முழுமையாக ஒத்துழைக்க வேண்டாமா. ஏன் சிறப்பு அனுமதி கேட்டீர்கள். இதுசரியல்ல. ’ என கடுமையாக தெரிவித்துள்ளார்.

Sources say that Ajith has strictly told Sathyajyothi Thiagarajan to stop Viswasam shoot till all film industry issues solved.

அடுத்த செய்தி

டிரெண்டிங்