ஆப்நகரம்

பாட்ஷா, தலைவா பாணியில் உருவாகும் விஸ்வாசம்?

நடிகர் அஜித் நடிக்கும் ‘விஸ்வாசம்’ திரைப்படம் பாட்ஷா, தலைவா படங்களைப் போன்று மும்பையை பின்னணியாக கொண்டு உருவாக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Samayam Tamil 25 Aug 2018, 4:31 pm
நடிகர் அஜித் நடிக்கும் ‘விஸ்வாசம்’ திரைப்படம் பாட்ஷா, தலைவா படங்களைப் போன்று மும்பையை பின்னணியாக கொண்டு உருவாக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
Samayam Tamil பாட்ஷா, தலைவா பாணியில் உருவாகும் விஸ்வாசம்?
பாட்ஷா, தலைவா பாணியில் உருவாகும் விஸ்வாசம்?


நடிகர் அஜித், தற்போது இயக்குநர் சிறுத்தை சிவாவுடன் இணைந்து, ‘விஸ்வாசம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில், அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்து வருகிறார்.

ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் பர்ஸ்ட்லுக் கடந்த சில தினங்களுக்கு முன் வெளியாகியது. அதில், அஜித் முதியவர் இளைஞர் என இரட்டை வேடத்தில் நடிப்பது போல வடிவமைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், விஸ்வாசம் படம் மும்பையை பின்னணியாக கொண்டு இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே, விஸ்வாசம் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத், சென்னை உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றுள்ள நிலையில், விரைவில் மும்பையில் படப்பிடிப்பு தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழில் பாட்ஷா, தலைவா, நாயகன் உள்ளிட்ட படங்கள் மும்பையையே பின்னணியாக வைத்து எடுக்கப்பட்டன. இப்போது, விஸ்வாசம் படமும் மும்பையை பின்னணியாக வைத்து எடுக்கப்படுவதாக வெளியாகி உள்ள செய்தி ரசிகர்களை உற்சாகமடைய செய்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்