ஆப்நகரம்

Radha Ravi: எப்போதும் பெண்களை கொச்சைப்படுத்துவது ஏன்? நடிகர் சங்கம் கண்டனம்

ராதாரவிக்கு பேச்சுக்கு, நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

Samayam Tamil 25 Mar 2019, 1:18 pm
பெண்களை இழிவாக பேசுவதால், திரைத்துறையில் பங்காற்றக்கூடிய பெண்களுக்கு அவமானத்தையும், மனஉளைச்சலையும் ஏற்படுவதை நடிகர் ராதாரவி உணரவில்லையா என தென்னிந்திய நடிகர் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.
Samayam Tamil ராதாரவிக்கு நடிகர் சங்கம் கண்டனம்
ராதாரவிக்கு நடிகர் சங்கம் கண்டனம்


திரைப்பட நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் ராதாரவி, நயன்தாரா குறித்து இழிவாக பேசியதாக கூறப்படுகிறது. இதற்கு கண்டனம் தெரிவித்து தென்னிந்தியாவின் பல திரைப்பிரபலங்களும், திரைக் கலைஞர்களும் கருத்துக்களை தெரிவித்தனர்.

தென்னிந்திய நடிகர் சங்கம் அறிக்கை


தென்னிந்திய நடிகர் சங்கம் அறிக்கை


நயன்தாரா குறித்து ராதாரவியின் சர்ச்சைப் பேச்சு பாலிவுட் திரையுலகம் வரை எதிரொலித்த நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கம் அவருக்கும் கண்டனம் தெரிவித்து, பல்வேறு கேள்விகளை எழுப்பி அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதில், ராதாரவியின் இரட்டை அர்த்த பேச்சுக்களை கேட்டு உண்மையில் மனம் வருந்துகிறது. இணையதள நேர்காணலிலும், திரைப்பட நிகழ்ச்சியிலும், பொது மேடைகளிலும் ராதாரவி இதுபோன்ற பேசுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

இதனால் திரைத்துறையில் பங்காற்றும் ஒட்டுமொத்த பெண்களுக்கும் அவமான சூழ்நிலையையும் மற்றும் மனஉளைச்சலையும் ஏற்படுத்துவதை ராதாரவி உணர்ந்திருக்கவில்லையா? நீண்ட வருடம் அனுபவம் பெற்றுள்ள நடிகர், இவ்வாறு நடந்து கொண்டால் வரக்கூடியவர்களுக்கும் தவறான வழிகாட்டுதலாக அமையும்.

இதுபோன்ற வக்கிரமான செயல்களில் நடிகர் ராதாரவி தொடர்ந்து செயல்பட்டால், திரைத்துறையில் அவருக்கு ஒத்துழைப்பு தருவது பற்றி தீவிரமாக முடிவு செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என நடிகர் சங்கம் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்