ஆப்நகரம்

ஓராண்டை நிறைவு செய்த நடிகர் சங்கம்!

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நடிகர் சங்க கூட்டணி தனது ஓராண்டை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.

TOI Contributor 18 Oct 2016, 4:54 pm
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நடிகர் சங்க கூட்டணி தனது ஓராண்டை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
Samayam Tamil south indian film association new team has completed one year
ஓராண்டை நிறைவு செய்த நடிகர் சங்கம்!


கடந்த ஆண்டு அக்டோர் மாதம் 18ம் தேதி நடிகர் சங்கத்திற்கு புதிதாக நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தல் ஒரு பொதுத் தேர்தல் திருவிழா போல் நடைபெற்றது. மீடியாக்களின் கவனம் முழுவதும் நடிகர் சங்கம் மீதுதான் இருந்தது. அந்தளவுக்கு பரபரப்பாக நடத்தப்பட்ட தேர்தல்.

சரத்குமார் தலைமையிலான ஒரு அணியும், நாசர் தலைமையிலான மற்றொரு அணியும் தேர்தலில் போட்டியிட்டன. நாசர் தலைமையிலான அணியில் பொன்வண்ணன், கருணாஸ் ஆகியோர் துணைத் தலைவர் பதவிக்கும், விஷால் பொதுச் செயலாளர் பதவிக்கும், கார்த்தி பொருளாளர் பதவிக்கும் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.

தேர்தலில் கொடுத்த வாக்குறுதியை நாசர் அணியினர் வெற்றிகரமாக முடித்தனர். நடிகர் சங்கத்திற்கு வருமானம் ஈட்டித் தரும் வகையில் கல்யாண மண்டபம், தியேட்டர்கள் உள்ளிட்டவற்றைக் கட்ட முடிவு செய்தனர். கிரிக்கெட் போட்டி நடத்தி அதற்கான நிதியையும் குவித்தனர். இன்றுடன் ஓராண்டை வெற்றிகரமாக நாசர் அணியினர் கடந்துள்ளனர் என்றே சொல்லலாம். இந்த ஓராண்டில் நாசர் அணியினர் பல சோதனைகளையும், எதிர்ப்புகளையும் கடந்து வந்துள்ளனர். கூடிய விரைவில் நடிகர் சங்க கட்டிடம் கட்டினாலே போதும் அது நாசர் அணியினர் செய்யும் சாதனையாக பேசப்படும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்