ஆப்நகரம்

மறையும் வரையில் மாறாத குரல்... இந்திய சினிமாவின் இன்னொரு அதிசயம் எஸ்.பி.பி.

தன் முதல் பாடலிலிருந்து கடைசிப் பாடல் வரையிலும் ஒரே மாதிரியான குரல் தொனியில் பாடிக்கொண்டிருந்த பாடகன்

Samayam Tamil 25 Sep 2020, 4:49 pm
பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் இன்று மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இந்திய சினிமாவில் இதயம் வருடும் குரலுக்கு சொந்தக்காரர்கள் ஏராளம் இருந்துள்ள போதும் எஸ்.பி.பி.யின் வசீகரக் குரலுக்கு இதயம் அடிமையாகும் என்பது மறுக்க முடியாதது. அந்த வகையில் தன் வாழ்நாள் முழுக்க இசைக்கலைஞனாகவே இயங்கி முடித்திருக்கிறார் எஸ்.பி.பி.
Samayam Tamil மறையும் வரையில் மாறாத குரல்... இந்திய சினிமாவின் இன்னொரு அதிசயம் எஸ்.பி.பி.


பாடகர்களுக்கு முதல் மூலதனம் குரல்தான். பாடல்கள் பிரபலமாகி, தொழில்முறைப் பாடகரான பிறகும் தங்கள் குரலைப் பாதுகாப்பது அதிமுக்கியமான கடமைகளில் ஒன்று. இதற்காக பாடகர்களின் மெனக்கெடல் மிகப்பெரிது.

தொடர்ந்து இயங்குவதும், தசை நார்களுக்கான பயிற்சி அளிப்பதும், ஒலி அமைவுகளை கவனித்து உச்சரிப்புகளைச் சரி செய்வதுமாக நீண்டதொரு தொடர் பராமரிப்பு தேவையாக இருக்கிறது. இப்படியெல்லாம் பராமரித்தும் பல சமயங்களில் இயற்கை அந்த இதமான குரலைக் கெடுத்துவிடும்.

அந்தவகையில் எஸ்.பி.பி. என்ற இசை அடையாளத்தின் மனம் மயக்கும் குரல் மறையும் வரை அப்படியே இருந்தது. ஒரு தனிமனிதன் தனது 75ஆவது வயது வரை பாடிக்கொண்டே இருந்தார். தன் முதல் பாடலிலிருந்து கடைசிப் பாடல் வரையிலும் ஒரே மாதிரியான குரல் தொனியில் பாடிக்கொண்டிருந்த பாடகன் என்ற முறையில் இந்திய சினிமாவின் அதிசயங்கள் பட்டியலில் சேர்க்கபப்ட வேண்டியவராக இருக்கிறார் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்