ஆப்நகரம்

எஸ்.பி.பி-க்கு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா

தான் இசை அமைத்த பாடல்களை தனது அனுமதியில்லாமல் மேடை கச்சேரிகளில் பாடக்கூடாது என்று இளையராஜாவிடம் இருந்து நோட்டீஸ் வந்திருப்பதாக பிரபல பாடகர் எஸ்.பி.பால சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

TNN 19 Mar 2017, 11:37 am
அமெரிக்கா: தான் இசை அமைத்த பாடல்களை தனது அனுமதியில்லாமல் மேடை கச்சேரிகளில் பாடக்கூடாது என்று இளையராஜாவிடம் இருந்து நோட்டீஸ் வந்திருப்பதாக பிரபல பாடகர் எஸ்.பி.பால சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil spb gets legal notice from ilayaraja
எஸ்.பி.பி-க்கு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா


இதுகுறித்து அவர் பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள பதிவில் , " இரண்டு நாட்களுக்கு முன்பு இளையராஜாவிடம் இருந்து தனக்கும், பாடகி சித்ரா மற்றும் தனது மகன் சரண் ஆகியோருக்கும் நோட்டீஸ் வந்திருக்கிறது. அந்த நோட்டீஸில் இளையராஜா கம்போஸ் செய்த பாடல்களை அவரின் அனுமதி இல்லாமல் மேடையில் பாடவோ, இசைக்கச்சேரி நடத்தவோ கூடாது. அதையும் மீறி செய்தால் காப்புரிமை சட்டத்திற்கு எதிராகிவிடும். எனவே மிகப்பெரிய அபராதத்தொகையை சட்டப்படி தரவேண்டியிருக்கும்' என்று குறிப்பிட்டிருந்தது.

எனவே இனி வரும் கச்சேரிகளில் இளையராஜா பாடல்களை பாட இயலாது என்பதற்கான காரணத்தை ரசிகர்கள் அறிந்து கொள்வதற்காக இதைத் தெரிவிக்கிறேன் . ரஷ்யா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், துபாய் மற்றும் இந்தியாவில் பலமுறை இசை நிகழ்ச்சிகளில் இளையராஜாவின் பாடல்களை பாடி வந்திருக்கிறேன். அப்போதெல்லாம் இதுபோன்ற தடை ஏதும் வந்ததில்லை. இளையராஜாவுக்கு சங்கடம் தரும் வகையில் கருத்துகளை வெளியிட வேண்டாம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.



கடந்த சில மாதங்களாக எஸ்.பி,.பி உலகம் முழுவதும் இசைக் கச்சேரிகளை நடத்தி வருகிறார். அதில் அவர் இளையராஜா மற்றும் ஏனைய இசையமைப்பாளர்கள் இசையமைத்துள்ள பாடல்களை பாடி வருகிறார்.
spb gets legal notice from ilayaraja

அடுத்த செய்தி

டிரெண்டிங்