ஆப்நகரம்

ஸ்ரீதிவ்யாவை சூழ்ந்து கொண்ட கிராமத்து ரசிகர்கள்!

கிராமத்தில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகை ஸ்ரீதிவ்யாவை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு அவரை திக்குமுக்காட வைத்துள்ளனர்.

TOI Contributor 10 Nov 2016, 5:09 pm
கிராமத்தில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகை ஸ்ரீதிவ்யாவை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு அவரை திக்குமுக்காட வைத்துள்ளனர்.
Samayam Tamil sri divya surrounded by village people
ஸ்ரீதிவ்யாவை சூழ்ந்து கொண்ட கிராமத்து ரசிகர்கள்!


ஸ்ரீதிவ்யா, சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்த படம் ‘வருத்தப் படாத வாலிபர் சங்கம்’ அடுத்தது ‘காக்கிச் சட்டை’. ‘ரெமோ’ படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். அடுத்ததாக சிவகார்த்திகேயனுடன் நடிப்பீர்களா என்று கேட்டதற்கு, நாங்கள் ஜோடியாக நடித்த இரண்டு படங்களுமே வெற்றி பெற்றுள்ளன. அதனால் கூடிய சீக்கிரமே மீண்டும் இருவரும் இணைவோம் என்று நம்பிக்கையுடன்’’ தெரிவித்துள்ளார்.

விரைவில் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தில் நாயகியாக நடிக்க ஸ்ரீதிவ்யாவுக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. இந்நிலையில், காஷ்மோராவிற்கு பிறகு தற்போது ‘மாவீரன் கிட்டு’, ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ படங்களில் நடித்து வருகிறார் ஸ்ரீதிவ்யா. இந்தப் படங்களுக்காக அவுட்டோர் சூட்டிங் சென்றபோது, அங்கு தன்னை பார்க்க கிராமங்களிலிருந்து வரும் ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கி திக்கு முக்காடிப் போனாராம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்