ஆப்நகரம்

Sri Reddy: கீர்த்தி சுரேஷ் நோயாளியாகிவிட்டார், சாய் பல்லவி எப்படி தெரியுமா?- ஸ்ரீரெட்டி சர்ச்சை பதிவு

நடிகை கீர்த்தி சுரேஷ் தனது உடல் எடையை குறைத்தது குறித்தும் சாய் பல்லவி குறித்தும் ஸ்ரீ ரெட்டி சர்ச்சை கருத்தை தனது முக நூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Samayam Tamil 17 Jun 2019, 7:00 pm
கீர்த்தி சுரேஷ் தனது உடல் எடையை குறைத்த பின்னர் ஒரு நோயாளி போல காட்சி அளிக்கின்றார் என ஸ்ரீ ரெட்டி சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார்.
Samayam Tamil Keerthy Suresh 1


தெலுங்கு சினிமாவில் வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என எங்கும் வியாபித்திருக்கின்றது என சர்ச்சை கருத்தை கூறியுள்ளதோடு, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரை நிர்வாண போராட்டம் செய்தவர்.

அண்மையில் முருகதாஸ், ஸ்ரீகாந்த் என அவர் குறிப்பிட்டிருந்த நிலையில், விஷால் பெண்களை ஏமாற்றுபவர் என்பது போல குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் குறித்து ஒரு சர்ச்சை பதிவை ஸ்ரீரெட்டி பதிவிட்டிருந்தார்.
அதில் “கீர்த்தி சுரேஷும், நானும் ஒரே விமானத்தில் சென்றிருந்தோம். ஆனால் அவர் உடல் எடை குறைத்திருந்ததால் அவரை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் என்னை அனைவரும் அறிந்து கொண்டு என்னுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.

கீர்த்தி சுரேஷ் உடல் எடை குறைத்து நோயாளி போல காணப்படுகிறார். அவர் நடித்த மகாநடிகை படம் இயக்குனரால் தான் சிறப்பாக வந்தது. கீர்த்தி சுரேஷால் அல்ல. தற்போது சாய் பல்லவி சிறப்பாக முன்னேறி வருகின்றார்.” என பதிவிட்டுள்ளார்.


ஸ்ரீ ரெட்டியின் பதிவால் கீர்த்தி சுரேஷின் ரசிகர்கள் வசை பாடி வருகின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்