ஆப்நகரம்

ராகவா லாரன்ஸையும் விட்டு வைக்காத ஸ்ரீரெட்டி லீக்ஸ்!

ஸ்ரீரெட்டியின் பாலியல் புகார் லீக் லிஸ்ட்டில் தற்போது ராகவா லாரன்ஸ் பெயரும் இடம்பெற்றுள்ளது.

Samayam Tamil 13 Jul 2018, 1:53 pm
ஸ்ரீரெட்டியின் பாலியல் புகார் லீக் லிஸ்ட்டில் தற்போது ராகவா லாரன்ஸ் பெயரும் இடம்பெற்றுள்ளது.
Samayam Tamil Sri-Reddy -Raghava-Lawrence-1


தெலுங்கு திரையுலகில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரீரெட்டி. சமீப காலமாக இவர் நடிப்பதை விட்டு விட்டு சினிமாவில் இருக்கும் பல பிரபலங்கள் தன்னிடம் தவறாக நடந்து கொண்டார்கள் என்று பாலியல் புகார்கள் கூறி வருகிறார். தெலுங்கு சினிமாவில் நடிகர் நானி மற்றும் பல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் பெயர்கள் அடங்கிய பட்டியலை தினமும் வெளியிட்டு வருகிறார் ஸ்ரீரெட்டி.

தற்போது கடந்த இரண்டு நாட்களாக தமிழ் லீக்ஸ் என்கிற பெயரில், தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் மீது புகார் கூற தொடங்கியுள்ளார். ஏ.ஆர். முருகதாஸ், சென்னை கிரீன் பார்க் ஓட்டலில் என்னை அவர் ஆசைக்கு இணங்க வைத்ததாக புகார் கூறினார். மேலும் நடிகர் ஸ்ரீகாந்த் ஐதராபாத் பார்க் ஓட்டலில் வைத்து எனக்கு சினிமா வாய்ப்பு தருவதாக கறி என்னுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டார்.

இந்த இரு பரபரப்பு அடங்குவதற்குள் தற்போது நடிகரும், நடன இயக்குனரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸின்ம் மீது அவர் பாலியல் புகார் கூறியுள்ளார்.

தனது முகநூல் பக்கத்தில் “ஹைதராபாத்தில் உள்ள கோல்கோண்டோ ஹோட்டலில் அவரைச் சந்தித்தேன். அவரைப் அப்போது பார்க்கும் போது ஒரு முற்றும் துறந்த சாமி போல காட்சியளித்தார். அதைப் பார்த்து நான் வியப்படைந்தேன். அவர் புதிதாக வாய்ப்பு தேடி வருபவர்களுக்கு உதவி செய்து வருவதாகவும், ஏழைகளுக்கு தங்குமிடம் உட்பட பல உதவிகளை செய்து வருவதாகவும் என்னிடம் கூறினார். நேரம் ஆக ஆக அவருடைய சுய ரூபம் தெரிய வந்தது.

என் உடம்பில் ஆடையில்லாமல் ஒரு சில பகுதிகளை காட்டச் சொன்னார். நிர்வாணமாக கண்ணாடி முன் நிற்கச் சொல்லி ரொமாண்டிக்காக சில அசைவுகளை செய்ய சொன்னார். அதன்பின் என்னிடம் உறவு கொண்டார். அப்போது அவர் படத்தில் எனக்கு கண்டிப்பாக வாய்ப்பு தருவதாக கூறினார். அதை நம்பி அவருடன் பல நாட்கள் இருந்தேன். ஆனால், அவர் வாய்ப்பு எதுவும் தரவில்லை. என்னை ஏமாற்றிவிட்டார்.

ஸ்ரீரெட்டியின் தமிழ் லீக்ஸால் தமிழ் சினிமா ஆட்டம் கண்டுள்ளது. ஏ.ஆர். முருகதாஸ், ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ் ஆகியோரை தொடர்ந்து அடுத்தது யார் பெயர் வரப்போகிறது என்று புரியாத புதிராக உள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்