ஆப்நகரம்

இரண்டு படங்களை வாங்கிய ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ்!

ஒரே நேரத்தில் ஜி.வி.பிரகாஷ் மற்றும் தினேஷ் நடித்த இரண்டு படங்களை வாங்கியுள்ளது ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ்.

TOI Contributor 5 Mar 2016, 2:46 pm
ஒரே நேரத்தில் ஜி.வி.பிரகாஷ் மற்றும் தினேஷ் நடித்த இரண்டு படங்களை வாங்கியுள்ளது ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ்.
Samayam Tamil sri thenandal films bought 2 films at a time
இரண்டு படங்களை வாங்கிய ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ்!

‘கெனன்யா பிலிம்ஸ்’ நிறுவனம் சார்பில் செல்வகுமார் தயாரித்துள்ள படம் ‘ஒரு நாள் கூத்து’. படத்தை புதுமுக இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் ‘அட்டகத்தி’ தினேஷ் அவருக்கு ஜோடியாக மியா ஜார்ஜ் நடித்துள்ளனர். மற்றும் இவர்களுடன் நிவேதா பெதுராஜ், கருணாகரன், ரித்விகா, பாலசரவணன், ரமேஷ் திலக், ராமதாஸ் ஆகியோர் நடித்துள்ளனர். படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைத்துள்ளார். மேலும் இந்தப் படத்தின் தமிழக விநியோக உரிமையை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.
இதையடுத்து இதே கென்யா பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இன்னொரு படமான ‘ப்ரூஸ்லீ’யையும் இதே நிறுவனமே வாங்கி வெளியிடவுள்ளது. இந்தப் படத்தில் ஹீரோவாக ஜி.வி.பிரகாஷ், ஜோடியாக க்ருத்தி கார்பண்டா நடித்திருக்கிறார். இந்தப் படத்தை டைரக்டர் பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்தப் படத்திற்கு ‘யு’ சான்றிதழ் கிடைத்துள்ளது

அடுத்த செய்தி

டிரெண்டிங்