ஆப்நகரம்

சிவகார்த்திகேயனுடன் இணைந்த ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ்.!

ஸ்ரீதேனாண்டாள் நிறுவனம், விஜய், தனுஷை அடுத்து சிவகார்த்திகேயன் படத்தையும் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

TNN 21 Nov 2017, 11:50 am
ஸ்ரீதேனாண்டாள் நிறுவனம், விஜய், தனுஷை அடுத்து சிவகார்த்திகேயன் படத்தையும் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Samayam Tamil sri thenandal films planning to release velaikaran movie
சிவகார்த்திகேயனுடன் இணைந்த ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ்.!


விஜய் நடிப்பில் வெளியான 'மெர்சல்' படத்தை பிரமாண்டமாக தயாரித்த, ஸ்ரீதேனாண்டாள் நிறுவனம், அடுத்ததாக தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தை அதிக பொருட்செலவில் தயாரிக்கவுள்ளது.

இந்த நிலையில், சிவகார்த்திகேயன் நடித்த 'வேலைக்காரன்' படத்தின் செங்கல்பட்டு ஏரியா ரிலீஸ் உரிமையை மிகப்பெரிய தொகை கொடுத்து இந்நிறுவனம் பெற்றுள்ளது. சென்னையை விட அதிக வசூலை தரும், மல்டிபிளக்ஸ் காம்ப்ளக்ஸ் திரையரங்குகள் செங்கல்பட்டில் அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

எனவே வரும் கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியாகும் இந்த படத்தை செங்கல்பட்டு ஏரியாவில் அதிகளவிலான திரையரங்குகளில் வெளியிட ஸ்ரீதேனாண்டாள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அனேகமாக இதுவரை இல்லாத வகையில் செங்கல்பட்டு நகரின் அதிக திரையரங்குகளில் வெளியிடும் படம் வேலைக்காரனாகத்தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்