ஆப்நகரம்

ஸ்ரீதேவி மரணத்தில் சந்தேகமா? இயக்குநர் மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்

நடிகை ஸ்ரீதேவி மரணம் குறித்து விரிவான விசாரணை கோரி திரைப்பட இயக்குநர் சுனில்சிங் தொடர்ந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Samayam Tamil 11 May 2018, 2:03 pm
நடிகை ஸ்ரீதேவி மரணம் குறித்து விரிவான விசாரணை கோரி திரைப்பட இயக்குநர் சுனில்சிங் தொடர்ந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
Samayam Tamil sridevi-mystery-death
ஸ்ரீதேவி மரணத்தில் சந்தேகம்- இயக்குநரின் மனு தள்ளுபடி


குடும்ப உறவினர் திருமண விழாவில் கலந்துகொள்வதற்காக துபாய் சென்ற நடிகை ஸ்ரீதேவி கடந்த பிப்ரவரி 24ம் தேதி எதிர்பாராத விதமாக மரணமடைந்தார்.

குளியல் தொட்டியில் தவறி விழுந்ததால் ஸ்ரீதேவி மரணமடைந்தார் என்றும், அப்போது அவர் மது அருந்தியிருந்தார் என்றும் துபாய் போலீசார் வெளியிட்ட உடற்கூறு ஆய்வறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

மேலும் ஸ்ரீதேவியின் குடும்பத்தினர், அவர் தங்கியிருந்த நட்சத்திர ஹோட்டலின் பணியாளர்கள் என அனைவரிடமும் விசாரணை நடத்திய துபாய் போலீசார், நடிகை ஸ்ரீதேவியின் மரணத்தில் எந்த சந்தேகமும் இல்லை என்று தெரிவித்தனர்.

இந்நிலையில், பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளரும் இயக்குநருமான சுனில் சிங், ஸ்ரீதேவி மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இதுதொடர்பான மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதி ஏற்கனவே இதுபோன்ற இரண்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டினார்.

மேலும் நடிகை ஸ்ரீதேவியின் மரணம் எதிர்பாராத ஒன்று என்று கூறிய அவர், துபாய் போலீசார் நடத்திய விசாரணையில் சந்தேகப்படும் அம்சங்கள் எதுவும் இல்லை என்பதை சுட்டிக்காட்டி பாலிவுட் இயக்குநர் சுனில் சிங் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்