ஆப்நகரம்

ஸ்ரீதேவியின் உடல் நாளை பிற்பகல் தகனம்

நடிகை ஸ்ரீதேவியின் உடலுக்கு மும்பையில் நாளை பிற்பகல் 3.30 மணிக்கு தகனம் செய்யப்படும் என்று அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.

Samayam Tamil 27 Feb 2018, 7:36 pm
நடிகை ஸ்ரீதேவியின் உடலுக்கு மும்பையில் நாளை பிற்பகல் 3.30 மணிக்கு தகனம் செய்யப்படும் என்று அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.
Samayam Tamil sridevi cremation will be held tomorrow at 3 30 pm
ஸ்ரீதேவியின் உடல் நாளை பிற்பகல் தகனம்


நடிகை ஸ்ரீதேவி தமிழ் உட்பட இந்திய மொழி திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர். இவர் துபாயில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். இவரது உடலை துபாய் அரசின் சட்ட நடைமுறைகளின் படி மும்பைக்கு கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

துபாய் அரசு திங்கட்கிழமை ஸ்ரீதேவி மரணத்துக்கு இறப்புச் சான்றிதழ் அளித்தைத் தொடர்ந்து இன்று காவல்துறை உடல் இந்தியாவுக்குக் கொண்டு செல்ல அனுமதி வழங்கியுள்ளது.

இதனையடுத்து, தனி விமானம் மூலம் துபாயில் இருந்து மும்பைக்கு இரவு 9.30 மணிக்கு அவரது உடல் கொண்டுவரப்படுகிறது. பிற்பகல் 2 மணி வரை ஸ்ரீதேவியின் உடல் அந்தேரியில் உள்ள செலிபிரேஷன் ஸ்போர்ட்ஸ் கிளப் கார்டனில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும். 2 மணிக்கு இறுதிச் சடங்குகள் தொடங்கும். 3.30 மணிக்கு எஸ்.வி.சாலையில் உள்ள மயானத்தில் ஸ்ரீதேவியின் உடல் தகனம் செய்யப்படும் என்று அவரது குடும்பத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்