ஆப்நகரம்

Ajith Pink Remake: அஜித் உடன் இணைந்து நடிக்க உள்ள மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள்!

‘தல’ அஜித் நடிக்கவுள்ள 59வது படத்தில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வியும் இணைந்து நடிக்கவுள்ளார்.

Samayam Tamil 5 Feb 2019, 1:06 am
‘தல’ அஜித் நடிக்கவுள்ள 59வது படத்தில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வியும் இணைந்து நடிக்கவுள்ளார்.
Samayam Tamil Janhvi-Kapoor


‘விஸ்வாசம்’ படத்தை அடுத்ததாக நடிகர் அஜித் தனது 59வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். இந்தப் படத்தை எச்.வினோத் இயக்கவுள்ளார். தமிழில் உருவாகவுள்ள இந்தப் படம் அமிதாப்பச்சன் நடிப்பில் இந்தியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘பிங்க்’ படத்தின் ரீமேக்காகும்.

இந்தியில் அமிதாப்பச்சன் நடித்த கேரக்டரில் நடிகர் அஜித் நடிக்கிறார். நடிகை டாப்ஸி நடித்த கேரக்டரில் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கிறார். மேலும் பாலிவுட் நடிகை வித்யா பாலன் அஜித்தின் மனைவியாக நடிக்கிறார்.

இந்நிலையில் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் அஜித்தின் 59வது படத்தில் ஒரு கவுரவ வேடத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. அஜித் படத்தில் நடித்தால் ஜான்விக்கு தமிழில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று நினைத்து தன் மகளை நடிக்கவைக்கவுள்ளார் தயாரிப்பாளர் போனி கபூர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்