ஆப்நகரம்

தெலுங்கு படத்தில் கமிட்டான ஸ்ரீதேவி மகள் ஜான்வி!?

மறைந்த ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர், தற்போது தென்னிந்திய மொழிகளில் ஒன்றா தெலுங்கில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

Samayam Tamil 25 Sep 2018, 4:02 pm
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் ‘தடக்‘ இந்திப் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். ஸ்ரீதேவி, தமிழ், தெலுங்கு ஆகிய படங்களில் பல படங்களில் கதாநாயகியாக நடித்த பிறகு இந்தியில் அறிமுகமாகி அங்கும் கனவுக்கன்னியாக இருந்தார். ஜான்வி கபூர், ஹிந்தியில் அறிமுகமாவதற்கு முன்பே, தமிழ் அல்லது தெலுங்குப் படங்களில்தான் முதலில் நடிப்பார் என்று சொல்லப்பட்டது. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை, அவர் இந்தியில்தான் அறிமுகமானார்.
Samayam Tamil jhanvi


இந்நிலையில் தெலுங்குத் திரையுலகத்தில் முன்னணி நாயகனாக இருக்கும் விஜய் தேவரகொண்டா அடுத்து தெலுங்கில் நடிக்க உள்ள புதிய படம் ஒன்றில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஜான்வி கபூரிடம் பேசி வருகிறார்களாம். அவர் அதற்கு நடிக்க சம்மதிக்கலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்