ஆப்நகரம்

வெளியே போகணுமா? கொரோனா பற்றி ஸ்ரீகாந்த் எச்சரிக்கை வீடியோ

கொரோனா வைரஸ் எவ்வளவு வேகமாக பரவும் என்பதை கூறி ஒரு எச்சரிக்கை வீடியோவில் நடித்துள்ளார் நடிகர் ஸ்ரீகாந்த். வீட்டை விட்டு வெளியில் செல்லாமல் இருப்பது தான் அதை தடுக்கும் ஒரே வழி என்றும் அவர் கூறியுள்ளார்.

Samayam Tamil 20 Apr 2020, 11:58 am
கொரோனா வைரஸ் தோற்று தொடர்ந்து விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இந்தியாவில் தற்போது வரை 17 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 543 பேர் உயிரிழந்துள்ளனர்.
Samayam Tamil Srikanth in Corona Awareness Video


தமிழ்நாட்டிலும் நாளுக்கு நாள் கொரோனா உறுதி செய்யப்படும் நோயாளிகள் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் தான் இருக்கிறது. கடந்த சில தினங்களாக குறைந்திருந்த நிலையில் நேற்று மீண்டும் 105 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

மே 3ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருந்தாலும் இன்று முதல் ஒரு சில துறைகளுக்கு மட்டும் சில தளர்வுகளை மட்டும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இருப்பினும் தமிழ்நாட்டில் ஊரடங்கில் எந்த தளர்வும் தற்போது வரை அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் ஊரடங்கை மீறி வெளியில் செல்லும் நபர்களுக்கு கொரோனா பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் ஒரு விளம்பரத்தில் நடித்துள்ளார்.

"வெளியே ஒரு ரவுண்டு போய்ட்டு வரேன் மா.." என கூறிவிட்டு வெளியில் கிளம்பும் ஸ்ரீகாந்த், கதவை விட்டு வெளியில் செல்லாமல் 'கொரோனா காத்துக்கிட்டிருக்கு' என கூறி பதறியடித்து உள்ளே வருகிறார். எங்க வீட்டுக்கு வெளியே மட்டும் இல்ல, யார் வீட்டுக்கு வெளியேவும் கொரோனா நின்றுகொண்டிருக்கலாம் என அனைவரையும் எச்சரிக்கிறார் ஸ்ரீகாந்த்.

கொரோனா பாசிட்டிவ்வாக இருக்கும் ஒரு நபர் வெளியில் சுற்றினால் ஒரு மாதத்தில் 406 பேருக்கு அது பரவும். அந்த 406 பேர் வெளியில் சுற்றினால் அது 406x406x406x.. என போய்க்கொண்டே இருக்கும். சின்ன வயதில் நாம் விளையாடும் கண்ணாமூச்சி போலத்தான் கொரோனாவும், தொட்டால் அவுட்.

வீட்டை விட்டு வெளியில் வராமல் இருப்பது மட்டும் தான் கொரோனவை தடுக்கும் ஒரே வழி என ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.

அவரின் ஒரு நிமிட வீடியோ இதோ..

View this post on Instagram #covid2019 #stayhome #staysafe #coronaawarenesscampaign #weareinthistogether #thistooshallpass #srikanth A post shared by Vandana Srikanth (@vandanasrikanth) on Apr 19, 2020 at 2:51am PDT

அடுத்த செய்தி

டிரெண்டிங்