ஆப்நகரம்

எஸ்.எஸ்.ராஜமௌலி மகனுக்கு ஜனவரியில் திருமணம் – பொண்ணு இவங்கதான்!!

எஸ்.எஸ்.ராஜமௌலியின் மகன் கார்த்திகேயாவிற்கும் பூஜா பிரசாத் என்பவருக்கும் வரும் ஜனவரி மாதம் திருமணம் நடைபெற உள்ளது.

Samayam Tamil 19 Nov 2018, 3:36 pm
தெலுங்கின் முன்னணி இயக்குநரான எஸ்.எஸ்.ராஜமௌலியின் மகன் கார்த்திகேயாவிற்கும் பூஜா பிரசாத் என்பவருக்கும் வரும் ஜனவரி மாதம் திருமணம் நடைபெற உள்ளது.
Samayam Tamil எஸ்.எஸ்.ராஜமௌலி மகனுக்கு ஜனவரியில் திருமணம் – பொண்ணு இவங்கதான்!!
எஸ்.எஸ்.ராஜமௌலி மகனுக்கு ஜனவரியில் திருமணம் – பொண்ணு இவங்கதான்!!


தெலுங்கு சினிமாவில் மிக முக்கியமான இயக்குநராக திகழ்பவர் ராஜமௌலி. இவர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட பாகுபலி திரைப்படம், இந்தியா முழுவதும் வசூலில் சாதனைப் படைத்தது. மேலும், தெலுங்கு சினிமாவையும் தாண்டி இவருக்கு பெயரைத் தேடித் தந்தது.

இதைத் தொடர்ந்து, ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் இருவரையும் வைத்து புதிய படம் ஒன்றை ராஜமௌலி இயக்க உள்ளார். இதற்கான பூஜை கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்றது.

இந்நிலையில், ராஜமௌலியின் மகனான கார்த்திகேயாவிற்கும், நடிகர் ஜெகபதிபாபுவின் சகோதரர் மகள் பூஜா பிரசாத் என்பவருக்கும் வரும் ஜனவரி மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இதுக் குறித்து கார்த்திகேயா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்