ஆப்நகரம்

“சொந்தக்காலில் நின்றால் தான் நல்ல முடிவுகளை எடுக்கலாம்” : அக்ஷரா ஹாசன்!

“சொந்தக்காலில் நின்றால் தான் நல்ல முடிவுகளை எடுக்கலாம்” : அக்ஷரா ஹாசன்!

TOI Contributor 31 Mar 2017, 12:46 pm
நடிகர் கமல்ஹாசனின் இளைய மகள் அக்ஷரா ஹாசன் தற்போது மும்பையில் தனியாக வசித்து வருகிறார். இவர் சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்ற ஐஐஎஃப்ஏ உத்சவம் 2017 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதில் பேசிய அவர், சிறுவயதில் போர்டிங் பள்ளியில் படித்ததோ, அல்லது வேறு காரணமோ என்னை சொந்தக்காலில் நிற்க உதவியது என்றார். அவை மிகுந்த பொறுப்புள்ள பெண்ணாக மாற்றியதாகவும் கூறியுள்ளார்.
Samayam Tamil staying independently lets you take better decisions akshara haasan
“சொந்தக்காலில் நின்றால் தான் நல்ல முடிவுகளை எடுக்கலாம்” : அக்ஷரா ஹாசன்!


நீங்கள் சுதந்திரமாக, சொந்தக்காலில் நிற்கிறீர்கள் என்றால், மனதில் குழப்பம் இருக்காது. நல்ல முடிவுகளை எடுக்க முடியும் என்றும் பேசினார். 2015ஆம் ஆண்டு பால்கி இயக்கத்தில் வெளியான ஷமிதாப் படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான அக்ஷரா, தற்போது அஜித் உடன் விவேகம் படத்தில் நடித்துவருகிறார். எதிர்காலத்தில் சுவாரஸ்யமான கதாப்பாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிப்பேன் என்றும் அவர் கூறியிருக்கிறார். சவாலான கதாப்பாத்திரங்கள் மிகுந்த மகிழ்ச்சியை தருவதாக அக்ஷரா கூறுகிறார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்