ஆப்நகரம்

காதலரை தாக்கி காயப்படுத்திய பிரபல இயக்குநரின் மகள் கைது

பாரில் இருந்து வீடு திரும்பிய பிறகு ஏற்பட்ட பிரச்சனையில் காதலரை தாக்கி காயப்படுத்தியதற்காக பிரபல இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்கின் மகளை போலீசார் கைது செய்தனர்.

Samayam Tamil 2 Mar 2020, 9:18 am
பிரபல ஹாலிவுட் இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்கின் மகள் மிகேலா 23). அவர் ஆபாச படங்களில் நடித்து வருவதுடன், தயாரிக்கவும் செய்வதாக அண்மையில் அறிவிப்பு வெளியிட்டு அனைவரையும் அதிரச் செய்தார்.
Samayam Tamil mikaela spielberg


ஆபாச படங்களில் நடிப்பது தவறு இல்லை என்றும், அது தனக்கு திருப்தி அளிப்பதாகவும் மிகேலா கூறினார். காதலரின் மனம் நோகாமல் இருக்க ஆபாச படத்தில் பிற ஆண்களுடன் சேர்ந்து நடிப்பது இல்லை என்று தெரிவித்தார்.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை மிகேலா தனது காதலருடன் பாருக்கு சென்றுள்ளார். பாரில் இருந்து வீடு திரும்பிய பிறகு மிகேலாவுக்கும், காதலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. காதலர் மோசமாக பேசியதால் கோபம் அடைந்த மிகேலா கையில் கிடைத்த பொருட்களை எடுத்து அவர் மீது வீசியுள்ளார்.

இதில் மிகேலாவின் காதலருக்கு கையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் அளித்த புகாரின்பேரில் போலீசார் மிகேலாவை கைது செய்து நாஷ்விலில் உள்ள சிறையில் அடைத்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.

ஸ்டீவன் ஸ்பெல்பெர்க் தனது மனைவி கேட் கப்ஷாவுடன் சேர்ந்து தத்தெடுத்த மகள் தான் இந்த மிகேலா என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்