ஆப்நகரம்

வெளியான பேட்ட படத்தின் கதை: அதிர்ச்சியில் படக்குழு!

சென்னை: ரஜினியின் பேட்ட படத்தின் கதை குறித்து தகவல் கசிந்துள்ளதால் படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Samayam Tamil 3 Jan 2019, 9:07 pm
சென்னை: ரஜினியின் பேட்ட படத்தின் கதை குறித்து தகவல் கசிந்துள்ளதால் படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Samayam Tamil petta_


இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சசிகுமார், பாபி சிம்ஹா, யோகி பாபு, சிம்ரன், த்ரிஷா ஆகியோர் பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் பேட்ட. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் வரும் 10ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டுதிரைக்கு வரவுள்ளது. அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்கள் ஒவ்வொன்றும் மாஸாக இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் டிரைலர் வெளியாகி பட்டி தொட்டியெல்லாம் பிரபலமானது. சினிமா பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் சசிகுமார் இப்படத்தில் மாலிக் என்ற கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். அவர் ஒரு ஹிந்து பெண்ணை காதலிப்பாதாகவும், அது பெண் வீட்டாருக்கு தெரிந்து கூலிப் படையை வைத்து சசிகுமாரை கொன்று விடுவார்களாம்.
தமிழகத்தில் அதிகரித்து வரும் ஆணவக் கொலைகளை மையமாக வைத்து இந்த கதை கார்த்திக் சுப்புராஜ் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ரஜினியின் நண்பனான சசிகுமாரை கொலை செய்த கும்பலை பழி தீர்ப்பதே கதையாக கூறப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்