ஆப்நகரம்

தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் படத்தின் கதை தெரியுமா!?

நடிகர் தனுஷ் நடிக்கும் முதல் ஹாலிவுட் படமான “ஆன் எக்ஸ்ட்ரார்டினரி ஜர்னி ஆப் தி ஃபகிர்” எனும் படத்தின் கதை மிகவும் சுவாரஸ்யமானது.

TOI Contributor 28 Jun 2017, 7:36 pm
நடிகர் தனுஷ் நடிக்கும் முதல் ஹாலிவுட் படமான “ஆன் எக்ஸ்ட்ரார்டினரி ஜர்னி ஆப் தி ஃபகிர்” எனும் படத்தின் கதை மிகவும் சுவாரஸ்யமானது.
Samayam Tamil story of dhanushs hollywood movie an extraordinary journey of the fakir
தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் படத்தின் கதை தெரியுமா!?


நடிகர் தனுஷ் துள்ளுவதோ இளமை எனும் படத்தில் எளிமையாக அறிமுகமான மிக சாதாரண நடிகர். ஆனால் தன் திறமையால் இன்று பாலிவுட் கடந்து ஹாலிவுட் வரை சென்றுவிட்டார். பாலிவுட்டில் ராஞ்சனா, ஷமிதாப் படங்களில் நடித்து நற்பெயர் பெற்ற தனுஷ் தற்போது “ஆன் எக்ஸ்ட்ரார்டினரி ஜர்னி ஆப் தி ஃபகிர்” எனும் ஹாலிவுட் படத்தில் நடித்துவருகிறார்.

இந்தப்படம் “ஆன் எக்ஸ்ட்ரார்டினரி ஜர்னி ஆப் தி ஃபகிர்” எனும் நாவலை அடிப்படையாக கொண்டு திரைக்கதை எழுதப்பட்டுள்ளது. இந்த நாவலின் கதைப்படி அஜா எனும் மேஜிக் நிபுணர் ஒருவர் இந்தியாவின் ராஜஸ்தானை சேர்ந்தவர்.

மிகவும் வறுமையில் வாடும் அஜா, தன் அம்மாவின் கட்டளைக்கு இணங்க பாரிஸ் செல்கிறார். பாரிஸில் உள்ள டாக்ஸி டிரைவர் ஒருவருடன் சண்டையிட்டு அங்குள்ள பீரோ ஒன்றில் ஒளிந்து கொள்கிறார். அந்த பீரோ ஐரோப்பாவின் பல பகுதிகளுக்கு பயணமாகிறது. அந்தப்பயணத்தில் அஜா சந்திக்கும் நபர்கள் மற்றும் இறுதியில் அவர் பயணம் என்னவானது என்று மிகவும் சுவாரஸ்யமாக சொல்லப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்