ஆப்நகரம்

புனித தாமஸ் வாழ்க்கை வரலாற்றை படமாக்கும் சிவாஜி பிலிம்ஸ்

இயேசு கிறிஸ்துவின் சீடர்களில் ஒருவரான புனித தாமஸ், வாழ்க்கை வரலாறு படமாக உருவாகிறது.

TNN 28 Apr 2017, 11:39 pm
இயேசு கிறிஸ்துவின் சீடர்களில் ஒருவரான புனித தாமஸ், வாழ்க்கை வரலாறு படமாக உருவாகிறது. இந்த படத்தை அமெரிக்காவைச் சேர்ந்த தார்வின் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும், சிவாஜி புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன.
Samayam Tamil stthomas history to be filmed by sivaji films
புனித தாமஸ் வாழ்க்கை வரலாற்றை படமாக்கும் சிவாஜி பிலிம்ஸ்


இந்த வரலாற்று படத்தில் கி.பி.52-ல் புனித தாமஸ் இந்தியா வந்து கேரளாவிலும், தமிழ்நாட்டிலும் போதனை செய்தது, கொலையுண்டது பற்றிய சம்பவங்கள் இடம் பெறுகின்றன. இப்படத்தில் ஹாலிவுட் மற்றும் இந்திய சினிமா நடிகர், நடிகைகள், தொழில்நுட்பகலைஞர்கள் பணியாற்றயிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்துக்கான முதல் கட்ட வேலைகள் தொடங்கி உள்ளன. அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் படப்பிடிப்பு தொடங்குகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்