ஆப்நகரம்

சாடை மாடையாக ரஜினியை விமர்சித்த சுப்பிரமணியசாமி!

ரஜினி நடிப்பில் உருவான ‘காலா’ படத்தை சாடை மாடையாக விமர்சித்து வருகிறார் சுப்பிரமணிய சாமி.

Samayam Tamil 29 May 2018, 5:41 pm
ரஜினி நடிப்பில் உருவான ‘காலா’ படத்தை சாடை மாடையாக விமர்சித்து வருகிறார் சுப்பிரமணிய சாமி.
Samayam Tamil sub rajini


‘காலா’ படத்தில் நடிகர் ரஜினி மும்பை டானாக நடித்துள்ளார். இந்தப் படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. தெலுங்கு மற்றும் இந்தியில் வெளியான டிரைலர்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இருப்பினும் ஒரு சிலர் படத்தை விமர்சித்து வருகின்றனர்.

மத்தியில் ஆளும் பாஜக-வை சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி, ரஜினி நடித்த ‘‘காலா’ படத்தை பெயர் குறிப்பிடாமல் சாடை மாடையாக கடுமையாக சாடியுள்ளார்.

“ஆங்கிலேயர்கள் தமிழர்களை மூளை சலவை செய்து அடிமை பணியைச் செய்யவைத்தனர். தற்போது சினிமாவில் தமிழர்களை முதுகெலும்பில்லாமல் பொறுக்கிகளுக்கு அடிபணியவைத்துள்ளனர்” என அவர் ட்விட் செய்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்