ஆப்நகரம்

தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து குறித்து பேச உரிமையில்லை: வைரலாகும் வீடியோ!

தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து குறித்து தனுஷின் அகில உலக ரசிகர் மன்ற தலைவர் இயக்குனர் சுப்பிரமணியம் சிவா பேட்டியளித்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Samayam Tamil 21 Jan 2022, 10:58 am
இந்திய சினிமாவில் பிரபல நடிகராக திகழும் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், நடிகர் தனுஷுக்கும் கடந்த 2004ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் பரஸ்பரம் பிரிய உள்ளதாக அறிவித்துள்ளது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
Samayam Tamil Dhanush - Aishwarya
Dhanush - Aishwarya


இது தொடர்பாக இருவரும் தங்கள் சமூக வலைதள பக்கங்களில் தனித்தனியாக அறிக்கைகள் வெளியிட்டனர். அதில், '18 ஆண்டுகள் நண்பர்களாக, தம்பதிகளாக, பெற்றோர்களாக மற்றும் நலம் விரும்பிகளாக எங்கள் இருவரையும் ஒன்றாக இணைத்த இந்த பயணம் வளர்ச்சி, புரிதல், அனுசரிப்பு என இருந்தது.

இன்று எங்கள் பாதைகள் பிரியும் ஒரு கட்டத்தில் நிற்கிறோம். நாங்கள் இருவரும் பிரிவதாக பரஸ்பரம் முடிவு செய்துள்ளோம். மேலும் இருவரும் எங்களை சிறப்பாக புரிந்து கொள்ள நேரம் ஒதுக்குகிறோம். தயவு செய்து எங்கள் முடிவை மதித்து, இதை சமாளிக்க தேவையான தனி மனித சுதந்திரத்தை எங்களுக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்' என்று தெரிவித்திருந்தனர்.

மலையாள நடிகையை இரண்டாம் திருமணம் செய்த பிரபல வில்லன் நடிகர்!
தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து அறிவிப்பு வெளியானதில் இருந்து சோஷியல் மீடியா முழுவதும் இந்த செய்தி தான் பேசு பொருளாக உள்ளது. இருவரின் விவாகரத்திற்கு என்ன காரணம் என்றும் பலரும் பலவிதமாக பேசி வருகின்றனர். இந்நிலையில் தனுஷ் ஐஸ்வர்யா பிரிவு குறித்து தனுஷின் அகில உலக ரசிகர் மன்ற தலைவர் இயக்குனர் சுப்பிரமணியம் சிவா பேட்டியளித்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

னுஷ் ஐஸ்வர்யா பிரிவுக்கு என்ன காரணம் என செய்தியாளர்கள் தனுஷ் ரசிகர் மன்ற தலைவர் சுப்ரமணிய சிவா அவர்களிடம் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதில் கூறிய சுப்பிரமணிய சிவா, ‘இது அவர்களின் வாழ்க்கை சம்ப்பந்தப்பட்ட தனிப்பட்ட விஷயம். இதில் மற்றவர்கள் கருத்து சொல்ல தேவையில்லை என்று தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்