ஆப்நகரம்

அஜித்தை இயக்குகிறாரா சுதா கொங்கரா; உண்மை என்ன?

அஜித்தின் அடுத்த படத்தை சுதா கொங்கரா இயக்கவுள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் பரவலாக பேச்சு கிளம்பியுள்ளது.

Samayam Tamil 23 Mar 2020, 8:29 am
அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்துவருகிறார். மிகவும் துரிதமாக நடைபெற்று வந்த ஷூட்டிங் கொரோனா வைரஸ் பரவலால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அஜித் வீட்டில் மனைவி மற்றும் குழந்தைகளோடு மகிழ்ச்சியாக பொழுதை கழித்து வருகிறாராம். இந்த நிலையில் தான், அஜித்தின் அடுத்த படத்தை சுதா கொங்கரா இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil sudha kongara team up with actor ajith next


இன்னும் உறுதிப்படுத்தப்படாத இந்த தகவலில், சுதா கொங்கரா அஜித்துக்காக கதை தயார் செய்து வருவதாகவும், அந்த கதை அஜித்துக்கு பிடித்தால் நிச்சயம் அவரின் அடுத்த படத்தை சுதா இயக்குவார் எனவும் கூறப்பட்டுள்ளது. ஒருவேளை அஜித் சுதாவுடன் இணைந்தால், பெண் இயக்குநருடன் அவர் இணையும் 3 வது படம் இதுவாகும். ஏற்கனவே, உயிரோடு உயிராக, இங்லிஷ் விங்லிஷ் உள்ளிட்ட படங்களில் பெண் இயக்குநரோடு பணிபுரிந்துள்ளார் அஜித்.

சுஷ்மா அஹுஜா, கௌரி ஷின்டேவைத் தொடர்ந்து அஜித்தை இயக்கப்போகும் மூன்றாவது பெண் இயக்குநராக சுதா கொங்கரா இருப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் தெரிந்துகொள்ள வேண்டும்.

சுதா தற்போது சூரரைப் போற்று படத்தை முடித்து விட்டு, அதை திரைக்கு கொண்டு வரும் வேலைகளில் மும்முரமாக இருக்கிறார். இதனிடையே தளபதி 65 படத்தை இயக்கவும் அவருக்கு வாய்ப்பு உருவானது. ஆனால் விஜய் தற்போதைக்கு இவர் படத்தில் நடிக்கவில்லை எனவும் தகவல் வெளியானது. இந்நிலையில்தான் அஜித்துக்காக கதை தயார் செய்வதாக மற்றொரு தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்