ஆப்நகரம்

இறுதிச்சுற்று இயக்குனருடன் இணையும் சூர்யா!

நடிகர் சூர்யா, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், இயக்குனர் சுதாகோங்ரா ஆகிய மூவரும் ஒரு படத்தில் இணையவுள்ளனர்.

Samayam Tamil 28 Jul 2018, 3:21 pm
நடிகர் சூர்யா, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், இயக்குனர் சுதாகோங்ரா ஆகிய மூவரும் ஒரு படத்தில் இணையவுள்ளனர்.
Samayam Tamil இறுதிச்சுற்று இயக்குனருடன் இணையும் சூர்யா!


இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா தற்போது ‘என்ஜிகே’ என்ற படத்தில் நடித்து வருகிறார். தற்போது இந்தப் படத்தின் 90 சதவிகித படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளனர். தற்போது இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகுமா என்பது இன்னும் சந்தேகமாகவே உள்ளது.

இந்நிலையில் நடிகர் சூர்யா, தற்போது கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சூர்யாவின் அடுத்தப் படத்திற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அது சூர்யாவின் 38வது படமாம். இந்தப்படத்தை ‘இறுதி சுற்று’ படத்தை இயக்கிய சுதாகோங்ரா இயக்கவுள்ளாராம். இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கவுள்ளாரம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்