ஆப்நகரம்

பில்டப்பா, பீலாவா உலகம் நம்மல பாக்கணும் - பிக்பாஸ் சுஜா கடிதம்

பிக் பாஸ் போட்டியில் wild card மூலம் போட்டியாளராக நுழைந்தவர் சுஜா வருணி. 100வது நாள் நெருங்கும் சமயத்தில் அவர் மக்களின் ஓட்டுகளை பெறாததால், வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

TNN 26 Sep 2017, 10:34 am
பிக் பாஸ் போட்டியில் wild card மூலம் போட்டியாளராக நுழைந்தவர் சுஜா வருணி. 100வது நாள் நெருங்கும் சமயத்தில் அவர் மக்களின் ஓட்டுகளை பெறாததால், வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
Samayam Tamil suja varunee facebook status on bigg boss tamil
பில்டப்பா, பீலாவா உலகம் நம்மல பாக்கணும் - பிக்பாஸ் சுஜா கடிதம்


பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து சுஜா தற்போது தனது எண்ணத்தை பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார்.
அதில், “மக்கள் பிரதிநிதி கமல் ஹாசனுக்கும், பிக் பாஸ் குழுவுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். சமூக வலைத்தளங்களில் உங்களின் பொன்னான நேரத்தை ஒதுக்கி என்னை மீம்ஸ் போட்டு கலாய்த்ததை நான் நேர்மறையாக எடுத்துக் கொள்கின்றேன்.

ஒரு சிலர் என்னை கடின உழைப்பாளி, சுயநலத்துடன் உள்ளார் என கூறியுள்ளீர்கள். அதில் என்ன தவறு இருக்கிறது அது ஒரு விளையாட்டு நிகழ்ச்சி தானே. அப்படி இருந்தால் ஒன்னும் பிரச்னை இல்லையே.

என்னை பொருத்த வரையில் ஹரிஸ் அல்லது கணேஷ் வெங்கட்ராமன் பட்டத்தை வெல்ல வாய்ப்புள்ளது. என்னை கமல் சார் ஊக்குவித்ததன் மூலம் நான் ஏற்கனவே பட்டத்தை வென்ற மகிழ்ச்சியை தருகின்றது.



நிகழ்ச்சியின் இறுதி நாள் அன்று மீண்டும் சந்திக்கிறேன். இனி சரியான போட்டியாளர்களுக்கு மக்கள் ஓட்டு போடவேண்டும் என்பது என் விருப்பம். கடைசியாக எனக்கு வாக்களித்த அனைவருக்கும் மிக்க நன்றி.” என தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்