ஆப்நகரம்

சுஜித் மரணம்: பொட்டில் அடித்தாற் போன்று ஒரு விஷயம் சொன்ன சாந்தனு பாக்யராஜ்

சுஜித் மரணம் குறித்து சாந்தனு பாக்யராஜ் கூறியிருப்பது மிகவும் உண்மை என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

Samayam Tamil 30 Oct 2019, 3:56 pm
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை சுஜித் வில்சனை உயிருடன் மீட்க முடியவில்லை. தமிழக அரசின் மெத்தனப் போக்கே இதற்கு காரணம் என்று சமூக வலைதளங்களில் பலர் புகார் தெரிவித்துள்ளனர்.
Samayam Tamil sujith


சுஜித்தின் குடும்பத்தாரை நேரில் சந்தித்த துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வமோ, குழந்தை விழுந்த தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணிகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர்களுக்கு அறிவுரை வழங்கியதாக தெரிவித்தார்.

சுஜித்தின் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் நிவாரணம் அளிக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார். இந்நிலையில் நடிகர் சாந்தனு பாக்யராஜ் போட்ட ட்வீட் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

சுஜித் உயிருக்கு போராடியபோது அரை நிர்வாண போட்டோ, இப்போ கண்ணீரா?: நல்ல நடிப்பு மீரா மிதுன்

அவர் தனது ட்வீட்டில் கூறியிருப்பதாவது,

இது போன்ற சம்பவங்கள் மீண்டும், மீண்டும் நடப்பதை பார்த்து இதயம் நொறுங்குகிறது. #RIPSujith. சீனாவில் 300 அடி போர்வெல்லில் விழுந்த குழந்தை காப்பாற்றப்பட்டது. நம் நாட்டில் பல விஷயங்களுக்கு பெரும் தொகையை செலவு செய்கிறார்கள். ஆனால் இது போன்ற சம்பவங்கள் நடக்கும்போது உயிர்களை காக்க தொழில்நுட்பத்தை பெற முடியவில்லை என்பதை பார்க்க வருத்தமாக உள்ளது.

பெற்றோர்களே தயவு செய்து கவனமாக இருங்கள் என்று தெரிவித்துள்ளார்.



சாந்தனுவின் ட்வீட்டை குஷ்பு உள்ளிட்ட பலர் ரீட்வீட் செய்துள்ளனர். சுஜித்தின் மரணம் தேவையில்லாத ஒன்று. அந்த சம்பவத்தை விவரிக்க வார்த்தையே இல்லை என்று லதா ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

போராடி உயிர் விட்ட சுஜித்: அதிரடி முடிவு எடுத்த லதா ரஜினிகாந்த்

ஆழ்துளை கிணற்றில் விழுந்து பலியான கடைசி குழந்தை சுஜித்தாக இருக்கட்டும் என்பதே தமிழக மக்களின் பிரார்த்தனை ஆகும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்