ஆப்நகரம்

இதுதான் கேரக்டர்; பேட்ட படத்தில் தெறிக்க விடும் விஜய் சேதுபதி!

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘பேட்ட’ படத்தில், விஜய் சேதுபதி கேரக்டர் குறித்து, சன் பிக்சர்ஸ் டுவிட்டரில் வெளியிட்டுள்ளது. ’ஜித்து’ என்ற கேரக்டரில் விஜய் சேதுபதி நடிக்கிறார். இதுகுறித்த போஸ்டரில் கையில் துப்பாக்கி உடன், வெறித்தனமாக காட்சி அளிக்கிறார். இந்த பதிவு வைரலாகி வருகிறது.

Samayam Tamil 4 Dec 2018, 9:12 pm
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘பேட்ட’. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதில் விஜய் சேதுபதி, திரிஷா, சிம்ரன், நவாசுதின் சித்திக் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
Samayam Tamil Jithu


வரும் பொங்கலுக்கு ‘பேட்ட’ படம் வெளிவருகிறது. இதில் இடம்பெற்றுள்ள ‘மரண மாஸ்’ பாடல் வெளியாகி, அனைவரையும் கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது. ரஜினி படத்திற்கு முதல் முறையாக அனிருத் இசையமைத்துள்ளார்.

Petta Movie: ’பேட்ட’ படத்தில் விஜய் சேதுபதி கேரக்டர் குறித்து, சன் பிக்சர்ஸ் முக்கிய அறிவிப்பு!

மரண மாஸ் பாடலை எஸ்.பி.பாலசுப்பிரமணியன் மற்றும் அனிருத் இணைந்து பாடியுள்ளனர். பாடலாசிரியர் விவேக்கின் வரிகளில் மிகவும் சிறப்பான எழுதப்பட்டுள்ளது. சென்னைத் தமிழில் செம குத்துப் பாடலாக உருவாக்கப்பட்டுள்ளது.

இது ரஜினி ரசிகர்களையும் மகிழ்ச்சியில் திளைக்க வைத்துள்ளது. இந்நிலையில் பேட்ட படத்தில் விஜய் சேதுபதி கதாபாத்திரம் குறித்து, சன் பிக்சர்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

’ஜித்து’ என்ற பெயரில் விஜய் சேதுபதி நடிக்கிறார். இதுகுறித்த போஸ்டரில் கையில் துப்பாக்கி உடன், வெறித்தனமாக காட்சி அளிக்கிறார். இந்த பதிவு வைரலாகி வருகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்