ஆப்நகரம்

Sunitha Boya Nude Protest: தயாரிப்பாளர் என்னை ஏமாற்றிவிட்டார்... நடுரோட்டில் பிரபல நடிகை நிர்வாண போராட்டம்... பரபரப்பு!

Sunitha Boya Nude Protest: தயரிப்பாளர் தனக்கு பட வாய்ப்பு தருவதாக கூறி ஏமாற்றிவிட்டதாக நடிகை சுனிதா போயா நிர்வாண போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Authored byபஹன்யா ராமமூர்த்தி | Samayam Tamil 19 Nov 2022, 10:42 am
தயரிப்பாளர் தனக்கு பட வாய்ப்பு தருவதாக கூறி ஏமாற்றிவிட்டதாக நடிகை சுனிதா போயா நிர்வாண போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil sunitha boya nude protest sunitha accusing bunny vasu cheated her
Sunitha Boya Nude Protest: தயாரிப்பாளர் என்னை ஏமாற்றிவிட்டார்... நடுரோட்டில் பிரபல நடிகை நிர்வாண போராட்டம்... பரபரப்பு!



நடிகை சுனிதா போயா

தெலுங்கு சினிமாவில் துணை நடிகையாக வலம் வருபவர் சுனிதா போயா. பல படங்களில் துணை கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். இவர் தெலுங்கு சினிமாவின் பிரபல தயாரிப்பாளரான Bunny வாசு தனது படங்களில் வாய்ப்பு தருவதாக கூறி தன்னை ஏமாற்றிவிட்டார் என பரபரப்பு குற்றச்சாட்டை பல நாட்களாக கூறி வருகிறார்.

Nikki Galrani: டியூ டேட்டையும் சொல்லுங்களேன்... கர்ப்பம் குறித்த தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்த நிக்கி கல்ராணி!

தயாரிப்பாளர் Bunny வாசு

கீதா ஆர்ட்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் Bunny வாசு பல ஹிட் படங்களை தயாரித்துள்ளார். தெலுங்கு சினிமாவின் பிரபல விநியோகஸ்தர்களில் ஒருவராகவும் உள்ளார். தெலுங்கு சினிமா வட்டாரத்தில் Bunnyவாசுவுக்கும் அல்லு அர்ஜூனுக்கும் நெருக்கம் அதிகம் என்ற பேச்சும் உள்ளது.

காதலால் திருடி பட்டம் வாங்கிய நயன்தாரா!

படுக்கைக்கு பயன்படுத்தி

இந்நிலையில் Bunny வாசுபடங்களில் வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி தன்னை பல முறை படுக்கைக்கு பயன்படுத்தி கொண்டதாக சுனிதா போயா நீண்ட நாட்களாக குற்றம் சாட்டி வருகிறார். Bunny வாசு மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இதற்கு முன்பே பலமுறை சுனிதா போராட்டம் நடத்தியுள்ளார். Bunny வாசு மீது சுனிதா வழக்கும் தொடர்ந்தார். ஆனால் போதிய ஆதாரம் இல்லாததால் அந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Vignesh Shivan wish to Nayanthara: நீ முழுமையடைந்து விட்டாய்.. நான் செட்டிலாகி விட்டேன்.. நயனுக்காக உருகிய விக்கி!

தொடர்ந்து தொல்லை

Bunny வாசு மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஏற்கனவே சுனிதா போயா அரை நிர்வாண போராட்டம் நடத்தினார். இந்நிலையில் Bunny வாசு மீது பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து அவரது கீதா ஆர்ட்ஸ் நிறுவனத்தின் முன்பு நிர்வாண போராட்டம் நடத்தியுள்ளார் நடிகை சுனிதா போயா. அவரது தொல்லை தாங்க முடியவில்லை என்றும், தன்னை துன்புறுத்திகிறார் என்றும் அவரின் தாக்குதலால் 4 முறை மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்து கொண்டதாக நடிகை சுனிதா போயா தெரிவித்துள்ளார்.

Bigg Boss Tamil 6: உங்க நிஜ பொண்டாட்டியா? ஒவரா பண்ணாதீங்க ராபர்ட்... விளாசும் நெட்டிசன்ஸ்!

கொலை முயற்சி

மேலும் Bunny வாசு தன்னை 4 முறை கொலை செய்ய முயன்றதாகவும் குற்றம்சாட்டியுள்ளார் சுனிதா போயா. சுனிதா போயாவின் இந்த குற்றச்சாட்டுகள் தெலுங்கு சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே நடிகை ஸ்ரீரெட்டி பட வாய்ப்பு தருவதாக கூறி பலரும் தன்னை படுக்கைக்கு பயன்படுத்தி கொண்டு ஏமாற்றிவிட்டதாக சில ஆண்டுகளுக்கு முன்பு அரை நிர்வாண போராட்டம் நடத்தினர். மேலும் தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவை சேர்ந்த முன்னணி இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்கள் பெயரையும் குறிப்பிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Bigg Boss Tamil 6, Rachitha: ரச்சிதாவுக்கு மெஸேஜ் செய்தேன்... ஆனால் அவர் ரிப்ளை பண்ணல.. மனம் திறந்த தினேஷ்!

Sunitha boya

எழுத்தாளர் பற்றி
பஹன்யா ராமமூர்த்தி
செய்தி சேனல், எஃப் எம் (RJ) மற்றும் டிஜிட்டல் ஊடத்துறையில் 13 ஆண்டுகள் அனுபவம். இதழியலில் முதுகலைப்பட்டம் பெற்றுள்ளேன். பொது செய்திகள், அரசியல், க்ரைம், விளையாட்டு சினிமா மற்றும் உலக நடப்பு செய்திகளில் அனுபவம்.. தற்போது சமயம் தமிழில் சினிமா செய்திகளை அளித்து வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்