ஆப்நகரம்

சன்னி லியோன் மருத்துவமனையில் அனுமதி!

வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த கவர்ச்சி நடிகை சன்னி லியோன் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Samayam Tamil 23 Jun 2018, 4:18 pm
வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த கவர்ச்சி நடிகை சன்னி லியோன் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Samayam Tamil Sunny-Leone-810x540


நடிகை சன்னி லியோன் பாலிவுட்டின் கவர்ச்சி நடிகையாக இருந்து வருகிறார்கள். இவருக்கு பாலிவுட்டை அடுத்து கோலிவுட்டிலும் அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். தற்போது இவர் தமிழில் ‘வீரமாதேவி’ என்ற வரலாற்றுப் படத்தில் நடித்து வருகிறார். அதோடு ஹாலிவுட் டிவி சானலில் முக்கிய நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கி வருகிறார்.

அவருக்கு உலகளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள். கடந்த வியாழக்கிழமை அன்று உத்தர்காண்ட் மாநிலம் காசிப்பூர் தனியார் மருத்துவமையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் கவலையில் உள்ளனர். அவருக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. சனிக்கிழமை வரை அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின் வீடு திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்