ஆப்நகரம்

Sunny leone:விஷாலுக்கு ஓகே சொல்வாரா சன்னிலியோன் ?

நடிகர் விஷால் படத்தில் சன்னி லியோன் ஒரு பாடலுக்கு நடனமாட ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 17 Nov 2018, 12:48 pm
நடிகர் விஷால் படத்தில் சன்னி லியோன் ஒரு பாடலுக்கு நடனமாட ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil sunny-leone


கோலிவுட்டில் வடகறி படத்தில் தான் சன்னி லியோன் முதன் முறையாக ஒரு பாடலுக்கு நடனமாடி காலடி எடுத்து வைத்தார். அதன் பின்னர் பல பாலிவுட் படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார்.

தற்போது தமிழில் வீரமாதேவி படத்தில் சன்னி லியோன் நடித்து வருகின்றார். இந்த படத்தில் போர் புரியும் ராணியாக நடிக்கிறார்.

ஒரு பாட்டுக்கு நடனம் :
இந்நிலையில் விஷால் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘அயோக்யா’ படத்தில் சன்னி லியோன் நடனமாட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
வெங்கட் மோகன் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் ராஷி கண்ணா ஹீரோயினாக நடிக்கிறார். இப்படத்தில் சன்னிலியோன் ஒரு பாடலுக்கு நடனமாட ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்