ஆப்நகரம்

பஞ்சாபி படத்தில் நடிக்கும் சன்னிலியோன்!

பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன், தற்போது பஞ்சாபி படத்தில் பியூட்டி பார்லர் நடித்தும் ஒரு பெண்ணாக நடித்துள்ளார்.

Samayam Tamil 25 Jun 2018, 6:46 pm
பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன், தற்போது பஞ்சாபி படத்தில் பியூட்டி பார்லர் நடித்தும் ஒரு பெண்ணாக நடித்துள்ளார்.
Samayam Tamil suney leone


நடிகை சன்னி லியோன் பாலிவுட்டில் பல கவர்ச்சி படங்களில் நடித்துள்ளார். இவர் கனடா நாட்டைச் சேர்ந்தவர். இவர் பல ஆண்டுகளுக்கு முன்பு பாலிவுட் வந்து பல இந்தி படங்களில் நடித்தார். பின்னர் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார்.

தற்போது வடிவுடையான் இயக்கும் ‘வீரமாதேவி’ என்ற படத்தில் கதையின் நாயகியாக நடித்து வருகிறார். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் உருவாகி வருகிறது.

இந்த நிலையில், தற்போது சன்னி லியோன் பஞ்சாபி மொழியிலும் கால் பதித்துள்ளார். பஞ்சாபி சூப்பர் ஸ்டாரான தில்ஜித் என்பவருடன் தற்போது ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் சன்னி லியோன். இந்தப் படத்தில் பியூட்டி பார்லர் நடத்தும் பெண்ணாக பேபி நருல்லா என்ற வேடத்தில் நடிக்கிறார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்