ஆப்நகரம்

அஜித் படத்தில் பாடிய மக்கள் இசைக் கலைஞர் செந்தில் கணேஷ்!?

அஜித் நடிப்பில் உருவான ‘விஸ்வாசம்’ படத்தில் நாட்டுப்புற பாடகர் செந்தில் கணேஷ் ஒரு பாடலை பாடியுள்ளதாக கூறப்படுகிறது.

Samayam Tamil 12 Dec 2018, 3:58 pm
அஜித் & சிவா கூட்டணியில் நான்காவது முறையாக தற்போது உருவாகியுள்ள படம் ‘விஸ்வாசம்’. இந்தப் படத்தில் நயன்தாரா அஜித்துக்கு ஜோடியாக நடித்துள்ளார். படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படம் வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.
Samayam Tamil senthil-ganesh


சமீபத்தில் இந்தப் படத்தில் இடம் பெற்ற ‘அடிச்சுத் தூக்கு’ என்ற கிராமத்துப் பின்னணி பாடல் வெளியானது. இந்தப் பாடலை பாடலாசிரியர் விவேகா எழுதியுள்ளார். இந்தப் பாடலுக்கு இசையமைத்து பாடியுள்ளார் டி.இமான்.

இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவல்படி, பிரபல தனியார் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் நாட்டுப்புறப் பாடல்களை பாடிய பாடகர் செந்தில் கணேஷ் ‘விஸ்வாசம்’ படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்