ஆப்நகரம்

பழசை மறக்காத ரஜினி: பஸ் கண்டக்டருக்கு கை கொடுத்த சூப்பர் ஸ்டார்!

ரசிகர்களை சந்தித்து வரும் ரஜினிகாந்த் பஸ் கண்டக்டருக்கு மட்டும் கை கொடுத்து அசத்தியுள்ளார்.

TNN 29 Dec 2017, 9:53 pm
ரசிகர்களை சந்தித்து வரும் ரஜினிகாந்த் பஸ் கண்டக்டருக்கு மட்டும் கை கொடுத்து அசத்தியுள்ளார்.
Samayam Tamil super star rajinikanth hand shake with bus conductor
பழசை மறக்காத ரஜினி: பஸ் கண்டக்டருக்கு கை கொடுத்த சூப்பர் ஸ்டார்!


சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் 2வது கட்டமாக கடந்த 26ம் தேதி முதல் ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்து வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மாவட்ட ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார். இந்த நிலையில் 4வது நாளாக நடந்த இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் கோவை, திருப்பூர், வேலூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.


அப்போது ஒரு ரசிகர் பஸ் கண்டக்டர் உடையில் வந்திருந்தார். அவருக்கு மட்டும் ரஜினிகாந்த கை கொடுத்துள்ளார். இதன் மூலம் ரஜினி தன்னுடைய பழைய ஞாபகத்தை மீண்டும் நினைவுப்படுத்தியிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை வந்த ரசிகர்களுக்கு அவர் கை கொடுக்கவில்லை. ஆனால், ரஜினியை சந்திக்கும் ரசிகர்கள் அவரை தொடவோ, சால்வை, மாலைகள், காலில் விழவோ கூடாது என்பது விதிமுறை. இதையும் மீறி ரசிகர்கள் இவ்வாறு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னதாக ஒரு ரசிகர் ரஜினி காலில் விழுந்து வணங்கியிருந்தார். ஆனால், ரஜினியோ ரசிகர்கள் யாரும் எனது காலில் விழ வேண்டாம். கடவுள், தாய், தந்தை, பெரியோர்கள் காலில் மட்டுமே விழ வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சந்திப்பு நிகழ்ச்சி வரும் 31ம் தேதி உடன் முடிவடைகிறது. அப்போது, ரஜினி தன்னுடைய அரசியல் பயணம் குறித்து ரசிகர்கள் மத்தியில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்