ஆப்நகரம்

புற்று நோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மகேஷ் பாபு!

புற்று நோயால் பாதிக்கப்பட்ட பர்வீன் என்ற சிறுமியை, படப்பிடிப்பு தளத்திற்கு வரவழைத்து பேசியுள்ளார் பிரபல தெலுங்கு முன்னணி நடிகர் மகேஷ்பாபு.

Samayam Tamil 18 Mar 2019, 3:52 pm
தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் நடிகர் மகேஷ் பாபு. இவருக்கு தெலுங்கில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் இவர் தனது மனைவி நம்ரதாவுடன் இணைந்து பல்வேறு சமூக சேவைகளில் ஈடுப்பட்டு வருகிறார். கொடிய நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு டிரெஸ்ட் மூலம் மருத்துவ உதவிகளை அளித்து வருகிறார் மகேஷ் பாபு.
Samayam Tamil mahesgh-babu


இந்நிலையில் நேற்று முன்தினம், புற்று நோயால் பாதிக்கப்பட்ட தனது ரசிகையை தான் நடித்து வரும் ‘மகரிஷி’ படப்பிடிப்பு தளத்திற்கே நேரில் அழைத்து சந்தித்து சில மணிநேரங்கள் பேசியுள்ளார் நடிகர் மகேஷ் பாபு.

ஆந்திரா ஸ்ரீகாகுளம் பகுதியை சேர்ந்தவரான சிறுமி பர்வின் தனது விருப்ப நடிகர் மகேஷ் பாபுவை சந்தித்ததால் மகிழ்ச்சியுடன் காணப்படுகிறார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்